Feeds:
Posts
Comments

Archive for the ‘பதஞ்சலி’ Category

தியானமும் பிரபஞ்ச சக்தியும்

லகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை .இந்த பிரபஞ்சம் உருவாக யாரோ ஒருவர் முன்னதாக, ஏதோ ஒன்று வேறொன்றை உருவாக்கும் விதத்தில், இருந்திருக்க வேண்டும்.அது ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை. ஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி உருவமுண்டு. ஒவ்வொரு ஒலிக்கலவைகளுக்கும் தக்கவாறு வானில் பலவித உருவங்களை ஒளி வரைகின்றது. அதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) —யாகப் படருகின்றது.

இதைத்தொடர்ந்து நிகழச்செய்வதின் மூலம் உணவின் மூலம் ஏற்படும் சாதாரண வளர்சிதைமாற்றம் (METABOLISM) நிறுத்தப்பட்டு தெய்வீக சக்தி உடலைத் தன் பொறுப்பில் ஏற்கிறது. மூச்சு நிற்கிறது. மன ஆற்றல் என்ற யோக சக்தி இயற்கையை தன்வசப்படுத்துகிறது. இதுவே தியானம் என்ற தவத்தின் ஒரு நிலையாகும். இந்த ஒலி ரூபங்களை (குரல் உருவகங்களை) திருமதி வாட்ஸ் கியுசஸ் ஆராய்ச்சி முடிவை உலகுக்கு தந்தார். எந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது . வேத மந்திரங்களும் – உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.

Read Full Post »

ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி

பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விருபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மகார்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் அர்க்கப்பெர்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவபிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902 – ல் மகரிஷிகளை அணுகி, உண்மையை உணர்ந்தபடி தமக்குபதேசிக்கும்படி வினயத்துடன் வேண்டிக் கேட்ட வினாக்கட்கு, மஹர்ஷிகள் அவ்வபோது தமிழில் விடை எழுதித் தந்த இந்நூல் இதற்குமுன் பல முறை பதிக்கப்பெர்று இப்பொழுது இருபத்தி ஆறாவது பதிப்பாக வெளியிடப்படுகின்றது.

நான் யார் ?

சகல ஜீவர்களும் துக்கமேன்பதின்ரி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரனமாதளாலும், மணமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா னறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

DOWNLOAD

 

Read Full Post »

பதஞ்சலியின் யோக சாஸ்திரம்

ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன சாங்க்யம், யோகம் நியாயம், வைசேஷிகம் பூர்வ – உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது முதலில் யோகா விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரன்யகர்பர். பதஞ்சலி அதை சுத்திர வடிவமாக்கினார் யோகா சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும். வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் , வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள் .

இந்த பதஞ்சலி யோகா சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு

யோகம் என்றால் யோகா ஆசனகல்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள் ஐக்கியம்;ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம் இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற திஷை கிடைத்தவருக்கே உரித்தாகும் இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது பல போலிகளும் வந்தாகிவிட்டது.

பதஞ்சலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார் அவை இங்கு பதியப்படுகின்றன சமஸ்கிருத மூலமும் தமிழில் சுக்கு மிளகு திப்பிலி ரீதியில் எழுதப்பட்டுள்ளது. பொருள் எளிய  முறையில்  புரிய  வைக்க  முயன்று  இருக்கிறேன். இதுதான் பொருள் என்று இல்லை. ஆழ்ந்து யோசிப்போருக்கு வேறு பொருள் கிட்டக்கூடும்.

இது ஒரு கிராஷ் கோர்ஸ் இல்லை. விடாமுயற்சி உள்ளவருக்கே இது பயனாகும். பர்ரின்னையும் அப்பியாசமும் மிக அவசியம் நமக்கு இதை அடையவே பேரு முயற்சி வேண்டும் படித்து உடனே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நிதானமாகவே படிக்க வேண்டும் கலைச்சொற்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் ஏனெனில் அது அடுத்த வரிகளில் வரும். அப்போது இது என்ன என்று விழிக்கக்கூடாது. இது தியரி மட்டுமே பயிலுவதற்கு ஒரு குரு அவசியம் தேவை தயை செய்து யாரும் குரு மேற்பார்வை இல்லாமல் முயற்சி ஆரம்பித்து அவாத்தை பட வேண்டாம். அப்படி ஒன்றும் செய்யவும் முடியாது ஏன் பின்னே இதை பதிக்கிறேன் எனில் எதோ ஒரு தூண்டுதலாலேயே. யாருக்கோ பயன்படும் .

patanjali part1

patanjsali part2

patanjsali part3

patanjsali part4

DOWNLOAD

Read Full Post »