Feeds:
Posts
Comments

Archive for July, 2013

வர்ணம்

ர்மம்தான் நான்கு வர்ண அமைப்புகளாக பிரித்து ஒழுங்குமுறைப்படுத்தப் பட்டுள்ளது. எல்லோரும்தான் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். ஆனால்,ஒரு சிலரே, உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்களோ, ஆரம்ப நிலையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் கூட பத்து நிமிடம் கூட அவர்களால் தாங்கள் நினைத்தபடி, மனதை ஒருமுகப்படுத்த முடிவதில்லை. அத்தகைய குறைந்த அளவு சாதனை அறிவுடைய சாதகர் சூத்திர சாதனைப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தன்னுடைய சுபாவத்தில் இருந்து தோன்றிய கர்மத்திறனுக்கு ஏற்ப, சேவை புரிவதில் இருந்தே தன்னுடைய கர்மத்தைத் தொடங்க வேண்டும். படிப்படியாக வைசியர், சத்திரியர், மற்றும் பிராம்மணப் பிரிவுகளில் அடையப்படுகின்ற உயர் கர்மத் திறன் அவருடைய சுபாவத்தில் பெருகிக் கொண்டே செல்லும். அவர் தனது பாதையில் உயர்ந்து கொண்டே செல்வார். மிகவும் உயர்வானது என்று கருதப்படுகின்ற பிராம்மண சாதனைப் பிரிவும்கூட தன்னில் குறைவுடையதுதான். ஏனெனில், இந்த நிலையிலும் கூட அந்த பிரம்மம் என்னவோ இன்னும் அடையப்படாத நிலையில் தனித்தே இருக்கிறது. பிரம்மத்தில் நுழைவு பெற்றுவிட்டால், அந்த பிராம்மணப் பிரிவு என்பதும் கூட இல்லாமல் போய்விடுகிறது.

“வர்ணம்” என்றால் “தோற்றம்” என்று பொருள். இந்த உடல் உங்களுடைய உணமையான தோற்றம் அல்ல. உங்களுடைய அக எண்ணவோட்டம் எதுவோ, அதுவே உங்களுடைய உண்மையான தோற்றம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “அர்ஜுனா! மனிதன் நம்பிக்கைமயமானவன். எனவேதான் அவனுக்கு எதிலாவது நம்பிக்கை அவசியம் இருக்கவே செய்கிறது. அவனுடைய நம்பிக்கை எவ்விதமோ, அவ்விதமே அவனும் இருக்கிறான். எண்ணம் எவ்வாறோ, அவ்வாறே மனிதன்”.

Varnam

வர்ணம் என்பது கர்மத்திறனை மதிப்பிடுகின்ற அக அளவியல் குறீயிடு ஆகும். ஆனால், மக்கள் அனைவரும் இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தை விட்டுவிட்டு, வெளியில் உள்ள சமுதாயத்தில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, சாதிகளை உருவாகிக் கொண்டு, அவற்றையே ‘வர்ண அமைப்பு’ அல்லது ‘சாதி அமைப்பு’ என்று ஏற்றுக் கொள்வதுடன் நிற்காமல் அவற்றிற்கான சட்டதிட்டங்கள். ஒழுங்குமுறைகள் என்று எதை எல்லாமோ உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவை அனைத்தும் வெறும் சமுதாய அமைப்புகளே தவிர, வேறொன்றுமில்லை. அவர்கள் கர்மத்தின் உள்ளது உள்ளபடியான யதார்த்த உருவத்தைத் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வளைத்தும் முறுக்கியும் மாற்றி மாற்றி அமைத்தும் கொள்கின்றனர். அதன்மூலம், அவர்களுக்குக் கிடைக்கின்ற போலித்தனமான சமுதாய மரியாதை மற்றும் சலுகைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தற்காத்து கொள்கின்றனர். காலப்போக்கில் வர்ணத்தை நிச்சியம் செய்வது பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்துவிட்டது. ஆனால், உண்மையில் அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணர், “நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்” என்கிறார். அப்படியென்றால் இந்த பாரத தேசத்திற்கு வெளியில் படைப்பு என்ற பெயரில் ஒன்றுமே இல்லையா என்ன? ஆனால் அங்கெல்லாம் இந்த தேசத்தில் காணபடுவதைப் போன்று, “சாதிகள்” என்ற பெயரில் எந்த அமைப்புமுறையும் இல்லையே ஏன்? இந்த பாரத தேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான சாதிகள் மற்றும் அதற்குள் அடங்கிய கிளை சாதிகள் என்றொரு நிலை இருக்கிறதே! ஸ்ரீ கிருஷ்ணர் சாதியின் பெயரால் மனிதர்களை எல்லாம் பிரித்தாளும் வேளையில் ஈடுபட்டிருந்தாரா? இல்லை இல்லவே இல்லை. “குணகர்ம விபாகச”:– குணத்தை அடிப்படையாக கொண்டு, இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தையே நான்கு சாதனை பிரிவுகளில் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளேன்” என்கிறார் அவர்.

“கர்மாணி ப்ரவி பக்தானி”:- “கர்மமே பிரிக்கப்பட்டு உள்ளது.” கர்மம் என்றால் என்ன? என்பது புரிந்துவிட்டால், “வர்ணம் என்றால் என்ன?” என்பது புரிந்துவிடும். “வர்ணம் புரிந்துவிட்டால், வர்ணக் கலப்பு எனபதையும் உள்ளது உள்ளவாரே புரிந்து கொண்டு விடுவீர்கள்.

வர்ணக் கலப்பு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் …….

Read Full Post »

நரேனின் பிரார்த்தனை

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. ‘நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

Narenin Pirathanani

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். ‘நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்’ என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் ‘அன்னை என்ன சொன்னாள்?’ என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

‘ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்’ என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்’ என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் ‘நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது’ என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் …..

Read Full Post »

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்

ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண நரேன் தட்சனேசுவரம் சென்றான். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு அவனைக் கண்டதில் கொள்ளை மகிழ்ச்சி. உடனேயே உள்ளே சென்று இனிப்புகளைக் கொண்டு வந்து, அவனை ஒரு சிறு குழந்தையாகக் கருதி அவனுக்கு ஊட்ட ஆரம்பித்துவிட்டார். அவன்மீது பேரன்பு கொண்ட அன்னையானார் அவர்.

பிறகு நரேன் தான் இதுவரைப் பல குருமார்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான்:

‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’

‘ஆம், உண்மையில் தரிசித்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் ஸ்ரீ ராமகிருஷனர். ‘உன்னைப் பார்பதைப் போலவே, அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசுவது போலவே, ஒருவரால் கடவுளைக் காணவும் பேசவும் முடியும்’ என்றும் கூறினார்.

Ramakrishnarin Pathil

இந்த பதிலைக் கேட்டு நரேன் ஆச்சரியமடைந்தான். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய அனைத்தையும் அவன் கவனமாகக் கேட்டான்.

‘நான் தேடிக் கொண்டிருந்த குரு இவரே!’ என்று நரேனின் மனம் கூறியது. நரேன் அவருடைய சீடன் ஆனான்.

ஸ்ரீ ராமகிருஷனர் கடவுளைக் கண்டவர் என்று நரேன் அறிந்திருந்தான். இருப்பினும், கேள்விகள் கேட்காமல் எதையும் அவன் ஒப்புக் கொள்வதில்லை. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் விரும்பினார். தன்னிடம் வந்த இளைஜர்கள் சுயமாக சிந்திப்பதையும், கேள்விகள் கேட்பதையும் அவர் வரவேற்றார்.

தொடரும் …….

Read Full Post »

நரேனின்(சுவாமி விவேகானந்தரின்) கேள்வி…..

‘காசியைக் கண்ட ஒருவரே, காசியைப் பற்றிக் கூறி உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும்’ என்பது பழமொழி. தான் போதிப்பதை உணர்ந்த ஆசிரியரே தேவை என்பதே இதன் பொருள். நாம் எதையாவது கற்க விரும்பினால், அதைப் பற்றி அனைத்தும் அறிந்த ஆசிரியர், குரு நமக்குத்த் தேவை. ஆகவே கடவுளை யாரேனும் அறிய விரும்பினால், கடவுளை பற்றி தெரிந்த ஒருவரை அணுக வேண்டும். அத்தகைய ஒருவரை நரேன்(விவேகானந்தர்) தேட ஆரம்பித்தான். தான் சந்தித்த அத்தனை மத குருமார்களிடமும் அவன் கேட்ட கேள்வி இது ஒன்றே. ‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ ஆனால் ஒருவர் கூட அவனுக்குத் தான் கடவுளைக் கண்டதாகக் கண்டிருப்பதாகக் கூறமுடியவில்லை.

Narenin Kelvi

ஒரு நாள் நரேனின் அண்டை வீட்டினர் ஒருவர் அவனைத் தன் வீட்டில்  பாடுவதற்காக அழைத்திருந்தார். அந்த வீட்டினர் அன்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தம் கௌரவ விருந்தாளியாக அழைத்திருந்தனர். நரேன் மிக இனிமையாகப் பாடக் கூடியவனாதலால், ஸ்ரீ ராமகிருஷ்ணரை முன்பு பாடுவதற்காக அவனையும் அழைத்திருந்தனர்.

நரேனின் பாடல்களைக் கேட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் மிகவும் ஆனந்தமடைந்தார். நரேனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் வசிக்கும் தட்சினேசுவரத்திற்கு  அவனை வரும்படியும், அங்கு வந்து தனக்காகப் பாடும்படியும் வேண்டினார்.

இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் நரேனுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு என்றாலும் அது நரேனிடத்தில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன்பிறகு நரேனுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிக்க ஆரம்பித்தனர். ஆன்மிக லட்சியம் கொண்ட நரேன் அதற்கு உறுதியாக மறுத்துவிட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவரான ராமசந்திர தத்தர் நரேனிடத்தில் இருந்த ஆன்மிக நாட்டத்தைக் கவனித்தார். எனவே அவர் நரேனை தட்சனேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி தட்சனேசுவரம் சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தார் நரேன்(விவேகானந்தர்).

தொடரும் …..

Read Full Post »

இன்றைய கிறிஸ்துவர்கள்….

ஏசு நாதர் போதனை செய்து கொண்டிருக்கிறார். ஒருவன் அவரிடம் வந்து, ‘நீங்கள் போதிப்பது நன்றாக இருக்கிறது. நிறைநிலையை அடைய அதுதான் வழி என்று நினைக்கிறேன், அதைப் பின்பற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தாங்கள்தான் ஒரே தேவ மைந்தன் என்று உங்களை வழிபட நான் தயாராக இல்லை’ என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஏசுநாதர் என்ன பதில் சொல்லிருப்பார் ? ‘ சகோதரா, மிகவும் நல்லது. இலட்சியத்தை பின்பற்று, உன் வழியிலேயே முன்னேறு. இந்தப் போதனைக்குரிய பெருமையை நீ எனக்குக் கொடுக்கிறாயா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. நான் வியாபாரி அல்ல. நான் மதத்தை வியாபாரம் செய்யவில்லை. நான் உண்மையைப் போதிக்கிறேன், உண்மை யாருடைய சொத்தும் அல்ல. அது தனக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் பதிவு செய்ய முடியாது. உண்மை என்பது கடவுளே, முன்னேறு’ என்பதுதான் பதிலாக இருக்கும்.
swami_vivekanand
ஆனால் தற்காலத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? நீங்கள் ஏசுவின் போதனைகளைப் பின்பற்றுகிறீர்களா இல்லையோ, நீங்கள் அவருக்குப் பெருமை கொடுக்கிறீர்களா? நீங்கள் அவருக்குப் பெருமை கொடுத்தால்தான் காபாற்றப்படுவீர்கள், இல்லாவிடில் உங்களுக்கு முக்தியே இல்லை என்கிறார்கள்.இப்படி அந்தப் போதகரின் போதனைகளை இழிவுப்படுதுகின்றன.போராட்டமும் சண்டையும் எல்லாம் அவரைப் பற்றிதான். இப்படி வற்புறுத்துவதன் காரணமாக அவர்கள் யாரைப் பெருமைப்படுத்த விரும்புகிறார்களோ, அவருக்கு ஒருவகையில் அவமானமே தேடித் தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதைக் கண்டால் அவரே அவமானத்தினால் குன்றிப் போயிருப்பார். உலகில் ஒருவராவது தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டானா, இல்லையா என்பதைப் பற்றி அவர் கவலைபட்டாரா என்ன? செய்தியை சொல்ல வேண்டும் சொல்லிவிட்டார்.

ஆனால் இன்றைய கிறிஸ்துவர்கள் என்ன சொல்வார்கள்? நீங்கள் நிறைமனிதனாக இருக்கலாம், சுயநலம் துளியும் அற்றவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் எங்கள் போதகரை, எங்கள் மகானை ஏற்றுக்கொள்ளவிட்டால் பயனில்லை என்பார்கள். ஏன்? இந்த மூடநம்பிகைகளுக்கும் அறியாமைக்கும் என்ன காரணம்? இறைவன் ஒரே ஒரு தடவைதான் தோன்ற முடியும் என்று நினைப்பதுதான். முழுத் தவறும் அங்குதான் இருக்கிறது. கடவுள் உங்களுக்கு மனிதனாக தோன்றுகிறார். ஆனால் இயற்கையில் ஒரு தடவை நிகழ்வது முன்பும் நடந்திருக்க வேண்டும், பின்பும் நடக்கும். நியதியால் கட்டுப்படாத எதுவும் இயற்கையில் கிடையாது. எனவே ஒருதடவை நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கவேண்டும், நடந்து கொண்டேதான் இருந்திருக்கும்.

—-சுவாமி விவேகானந்தர்

எழுந்திரு விழித்திரு(ஞான தீபம்) 7  பக்கம் 287-289

Read Full Post »