Feeds:
Posts
Comments

Posts Tagged ‘Vivekananda’

சுவாமி விவேகானந்தர்  யார் தெரியுமா?

 

Mail

* ஒரு பெண்ணை குருவாக ஏற்று, தன் மனைவியையே தெய்வமாக    பூஜித்து, பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும் ஆதிபராசக்தியை கண்டு வழிபட்ட ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடர்.

* நம்நாட்டுப் பெண்கள் சங்ககாலப் பெண்களைப் போன்று கல்வியில் தேர்ச்சிமிக்கவர்களாகவும், சாதனையாளர்களாகவும் திகழவேண்டும் என்று தணியாத ஆவல் கொண்டு அதற்காகப் பாடுபட்டவர்.

* நமது பாரத நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணிவேராய் நின்று வலிமை சேர்த்தவர்.

* திலகர், காந்திஜி, நேதாஜி, அரவிந்தர், பாரதி…. போன்ற கணக்கில்லா பல சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்குவித்தவர்.

* சிகாகோவில் சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு இந்து தர்மத்தையும், பாரத நாட்டின் பெருமையையும் உலகோர் அனைவரும் அறியச் செய்தவர்.

* பாரதத்தை அடிமை நாடாகவும், காட்டுமிராண்டிகளின் நாடாகவும் எண்ணிய மேற்கத்திய நாட்டவரிடம் நமது நாட்டின் உயர்வையும் பெருமையையும் எடுத்துரைத்து உணர்த்தியவர்.

* இன்றும் நம்மிடையே அவரது படைப்புகள் மூலம் வாழ்ந்து, இளைஜர்களுக்கு தேசபக்தியையும், தன்னம்பிக்கையையும் அளித்து வருபவர்.

 

Read Full Post »

இமயமலையில்…..

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைச்சரிவில், மேற்கொண்டு ஏறமுடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தார் முதியவர் ஒருவர்.அவரைப் பார்த்ததும் அங்கே சென்றார் சுவாமி விவேகானந்தர். “நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன். இந்த பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்? இனிமேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்று அவரிடம் புலம்பினார் அந்த முதியவர்.

Untitled-1அதற்கு விவேகானந்தர், “பெரியவரே! சற்று கீழே பாருங்கள். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உங்கள் காலுக்கு கீழே வந்துவிடும்” என்றார்.

அவரது தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளை கேட்டதும், சோர்ந்து போய் இருந்த பெரியவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார் மலையின் உச்சியை அடைந்தார்.

Read Full Post »

சர்வ சமயப் பேரவையில்

சர்வ சமயப் பேரவையில்:

சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். எனவே சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலை இந்திய நாட்டின் சன்னியாசிகளைப் போல் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார். அவரை மக்கள் எகத்தாளமாக நடத்தினர். மேலை நாடுகளில் பிச்சை எடுப்பது குற்றம் எனக் கூறினார்கள். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது எதிர் வீட்டின் கதவு திறக்கப்பட்ட்து. ஒரு பெண்மனி வெளியே வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

1233560_590718274319052_45925771_n

சர்வ சமயப் பேரவை— செப்டம்பர் 1893:

1893ம் வருடம், செப்டம்பர் 11ம் நாள் திங்கள் கிழமை சர்வ சமயப் பேரவைக் கூடியது. அந்தக் குழுத்தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000 பேர்களைப் பார்த்தும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் “அமெரிக்க சகோதரி சகோதரர்களே” எனக் கூறி தன் உரையைத் துவங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து 2 நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் 7000 பேர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி எற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார். இந்த பேரவையில் இந்து மதத்தர்மத்தின்படி அனைத்து மதங்களும் உண்மையே, அனைத்து மதங்களையும் நாம் எற்றுக் கொள்ள வேண்டும் என்று முழுங்கினார். சுவாமிஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளி வந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது.

Read Full Post »

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013)

சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின  விழாவை முன்னிட்டு விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் 02/02/2013 அன்று தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் “சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி ” அமைக்கப்பட்டது .

001

கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் விதமாக படங்கள் வைக்கபட்டு இருந்தன. இதன் ஒரு பகுதியாக ஊக்கமூட்டும் வீடியோப் படங்கள் காண்பிக்கப்பட்டன. இந்த வீடியோ படங்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. கண்காட்சியில் புத்தக விற்பனையும் நடைப்பெற்றது.

002

கண்காட்சியில் 7 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 500 க்கு  மேற்பட்ட மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர். 80 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில் வீடியோ படம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினர் . கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்தியை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இக்கேள்விகள் சரியான பதில் எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு “விவேகானந்தர் அழைக்கிறார்” புத்தகமும் “மாணவனே மனதை ஒருமுகப்படுத்து ” என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

005

கண்காட்சியின் நிறைவு விழாவில் சுவாமி ஆத்ம கனானத்தர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். “மனிதா நீ மகத்தானவன் ” என்ற பாடலை பாடி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் தெரியாது என்று பதில் கூறினர். சரி காந்தியை பற்றி தெரியுமா என்று கேட்டார்.ஆம் தெரியும் என்று மாணவர்கள் அனைவரும் கூறினர். காந்தியை பற்றி தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியவில்லை என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் அமைதியாய் இருந்தனர். அதில் ஒரு புத்திசாலி மாணவி எழுந்து காந்தி தாத்தா நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டர் என் தாத்தா என்ன செய்தார் நான் ஏன் அவரை நினைவில் வைக்க வேண்டும் என்றார். அது போல நாம் வாழும் இந்த பூமியில் நாம் வாழ்ந்தற்குகான ஏதேனும் சான்றை விட்டுச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

008

தலைமையாசிரியர்  பேசும் போது இப்படி ஒரு வாய்ப்பு நமது பள்ளிக்கு கிடைத்தது  ஒரு பாக்கியம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவ , மாணவி அனைவரும் அவரது வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

009

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி பரிசுகள் வழங்கினார் மற்றும்  பள்ளிக்கு விவேகானந்தர் இளைஜர் மன்றம் சார்பில் நினைவுபரிசும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

011

Read Full Post »

Image

Image

Image

Read Full Post »

Naren School

6789

தொடரும் ……

Read Full Post »

சிறுவயதில் விவேகானந்தர்

 

தொடரும் …..

Read Full Post »

       மக்களுக்கு நமது கடமை

          இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திருக்கும் வேறாக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை. மேலை நாட்டின் ஏழைகள் பேய் பிசாசுகள்; அவர்களுடன் ஒப்பிட்டால் நமது ஏழைகள் தேவதைகள். எனவே நமது ஏழைகளின் நிலைமையை உயர்த்துவது மிக எளிது. நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பினர்க்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது. அவர்கள் இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வது. நமது நாட்டின் மக்களும் மன்னர்களும் செய்ய வேண்டிய பெரும் பணி இதுவே. இதுவரையில் இந்த துறையில் ஒன்றுமே செய்ய பட வில்லை. புரோகித ஆதிக்கம் , அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்று ஆண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன. இறுதியில் இந்தியாவின் ஏழைகள் தாங்கள் மனித பிறவிகள் என்பதையே மறந்து விட்டனர். அவர்களுக்கு கருத்துகளை அளிக்க வேண்டும். தாங்களை சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியுமாறு அவர்களின் கண்கள் திறக்க பட வேண்டும். பிறகு அவர்கள் தங்கள் உயர்வை தாங்களே தேடிக் கொள்வார்கள். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு ஆணும் , ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உயர்வை தாங்களே தேடிக்கொள்ள  வேண்டும். கருத்துக்களை  அவர்களுக்கு கொடுங்கள் – வேண்டிய உதவி அது ஒன்றே. மற்றவையெல்லாம் அதன் விளைவாக தொடர்ந்து  வந்தே தீரும். ரசாயனப் பொருட்களை சேர்த்து வைப்பது நமது வேலை, இயற்கை நியதிக்கு ஏற்ப படிகமாதல் தானாகவே நிகழும். அவர்களின் மூளையில் கருத்துகளை புகுத்துவது நமது கடமை, பிறவற்றை அவர்கள் செய்து கொள்வார்கள், இந்தியாவில் செய்ய வேண்டியது இதுதான்.

           ஏழைகளுக்கு கல்வி அளிப்பதிலுள்ள பெருங் கஷ்டம் இதுதான் . நீங்களே கிராமந் தோறும் இலவச பள்ளி ஒன்றை ஏற்படுத்துகீரிகள் என்று வைத்து கொள்வோம். அதனால் எந்த நன்மையும் வராது. ஏழை சிறுவர்கள் பள்ளிக்கு வருவதை விட வயல்களுக்கு சென்று தங்கள் தந்தைக்கு உதவுவார்கள், அல்லது வேறு வழியில் பிழைப்புக்கு வழி தேட முயல்வார்கள். இந்தியாவில் வறுமை அவ்வளவு கடுமையானது. எனவே மலை முகமதுவை  நாடி வாரவிட்டால் , முகமது மலையை நாடி செல்ல வேண்டும். ஏழை சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி அவனிடம் செல்ல வேண்டும். நமது நாட்டில் திட சித்தமுள்ள சுயநலமற்ற துறவிகள் உள்ளனர். அவர்கள் கிராமம் கிராமமாக சென்று மதத்தை போதிக்கவே செய்கின்றனர். அவர்களுள் சிலரை உலக விஷியங்களையும் போதிக்கின்ற ஆசிரியர்களாக்க முடியுமானால், அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று , வீடு வீடாக மத போதனை செய்வதுடன் உலகக் கல்வியும்  அளிப்பார்கள். இவர்களுள் இருவர் மாலை வேளைகளில் ஒரு கிராமத்திற்கு போகலாம்; காமார, பூகோளம் , தேசப் படங்கள் இவற்றில்  உதவியுடன் பாமர மக்களுக்கு வான இயல் , புவியியல் என்று எவ்வளவோ சொல்லித்தரலாம். பல்வேறு நாடுகளை பற்றிச் சொல்லலாம். ஆயுள் முழுவதும் நூல்களைப் படித்து அறிவதை விட நூறு மடங்கு அதிகமானவற்றை அவர்கள் இவ்வாறு செவி வழியாகக் கற்க முடியும்.

மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்கள் அடங்கிய கல்வி விபரங்களை நான் படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், நல்ல பண்பாட்டினையும் வளர்த்துக் கொள்வேன். அதன்பிறகு, மனம் பண்பட்டு விடும். மனம் என்னும் பண்பட்ட கருவி கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கொள்வேன்.கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதன்று. அப்படி திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் அஜீரணத்தால் உனக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

–சுவாமி விவேகானந்தா

Read Full Post »

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

–சுவாமி விவேகானந்தா ..

Read Full Post »

   கடவுளை பற்றிய கருத்து ……     

                         மதம் என்பது வளர்ச்சி பற்றியது என்பதை உணர வேண்டும் ; அது வெறும் பொருளற்ற பிதற்றல்கள் அல்ல . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு மனிதன் கடவுளை கண்டான். புதரில் கடவுளை கண்டார் மோசஸ். மோசஸ் கடவுளை கண்ட போது என்ன செய்தாரோ,  அது உங்களை காப்பாற்றுமா ? ஒருவன் கடவுளை கண்டது, உங்களை உற்சாகம் படுத்தி அவ்வாறு  செய்யும் படி துண்டலாம் , அதருக்கும் மேலாக அது உங்களுக்கு உதவி செய்யாது. முன்னோர்களின் உதாரனகளுடைய முழுப்பயனும் அவ்வளவுதான் . அதருக்கு மேல் ஒன்றுமில்லை. செல்லும் வழியிலுள்ள கைகட்டிய கம்பங்கள் அவை . ஒருவன் உண்டால் இன்னொருவனின் பசி தீராது. ஒருவன் கடவுளை காண்பது மற்றொரு மனிதனைக் காபற்றாது. உங்களுக்கு நீங்களே கடவுளை காண வேண்டும். இப்போது சண்டை எல்லாம் கடவுளுக்கு  ஒரு உடலில் முன்று தலைகளா அல்லது ஆறு தலைகளா என்பது பற்றியே ! ஆனால் நீங்கள் கடவுளை கண்டதுண்டா என்றால் இல்லை ; காண முடியும் என்று நம்புவதும் இல்லை. நாம் எவ்வளவு மதிகெட்ட முட்டாள்கள் ! நிச்சியமாக பைதியகாரர்களே.

கடவுள் என்று ஒருவர் உண்டானால் , அவர் உங்கள் கடவுளாகவும் என் கடவுளாகவும் இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் தொண்டுதொட்டு வரும் கருத்து. சூரியன் யாருக்கு சொந்தம் ? அம்புலி மாமா எல்லாருக்கும் மாமா என்கிரிகள் . கடவுள் ஒருவர் உண்டானால் , நீங்கள் அவரை பார்க்க முடிய வேண்டும் . இல்லாவிட்டால் அவர் எப்படியாவது போகட்டும் !

கடவுள் ஒருவர் இருக்கிறார் , அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லாரும்  சொல்கிறீர்களே , எங்கும் நிறைத்திருக்கிறார் பற்றி உங்கள் கருத்து என்ன ?சற்று கண்களை மூடிக்கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்கு கூறுங்கள். உங்கள் சிந்தனையில் விரிவதுதான் என்ன ? ஏற்கனவே நீங்கள் கண்ட பரந்த கடல் அல்லது விரிந்த நீல வானம் , அல்லது அகன்ற புல்வெளி அல்லது இவைபோன்ற வேறு எதோ ஒன்று , அப்படிதானே ? இதுதான் எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நீங்கள் சொல்லும் பொருளானால் அது பயனற்றது, நீங்கள் அதன் பொருளை உணரவே இல்லை. இறைவனின் மற்ற குணங்களும் அப்படிதான். அவர் எல்லாம் வல்லவர் , எல்லாம் அறிந்தவர் என்று கூறும் பொது நாம் என்ன புரிந்துகொள்கிறோம் ? எதுவும் இல்லை . மதம் என்பது அநுபூதி. இறைவனை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் அனுபூதியில் அறியும்போதுதான் நீங்கள் இறைவனை வழிபடுகிரிகள் என்று கூறுவேன். அதை அடையாதவரை , நீங்கள் அந்தச் சொற்களிலுள்ள எழுத்துக்களை எழுத்துகுட்டி  படிக்க தெரிந்தவர்கள் அவ்வளதான்.

இந்த அனுபூதி நிலையை அடைய , நாம் கண்ணுக்கு புலனாகின்றவை வாயிலாக செல்ல வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கை கற்கும் போது முதலில் புறபொருட்களின் மூலம் தான் ஆரம்பிக்கிறது , பிறகு தான் மனத்தாலேயே செய்ய கற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தையிடம் 5 * 2 = 10 என்று கூறினால் அதருக்கு ஏதும் புரியாது. ஆனால் பத்து பொருட்களை கொடுத்து , அது எப்படி என்பதை காட்டி விளக்கினால் புரிந்து கொள்ளும். இது நிதானமான நீண்ட பாதை இங்கு நாம் எல்லாரும் குழந்தைகள். நாம் வயது முதிந்தவர்கள் இருக்கலாம் , உலகிலுள்ள எல்லாம் நூல்களை படித்திருக்கலாம்; ஆனால் ஆன்மிக துறையில் நாம் எல்லாரும் குழந்தைகளே.  கொள்கைகள் , தத்துவங்கள் , அற கோட்பாடுகள் எல்லாவற்றையும் எவ்வளவுதான் உங்கள் மூளைக்குள் திணித்தாலும் அவற்றால் பெரிதாக பலன் ஒன்றும் இல்லை. நீங்கள் யார் , அனுபூதியில் என்ன உணர்திருகிரிகள் ? இவைதான் பயனுள்ளவை , சாரமனவை. ஆனால் நாம் கொள்கைகளையும்  கோட்பாடுகளையும் அறிதிருக்கிறோம் , அனுபூதியில் எதையும் உணரவில்லை .

சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் . மதம் என்பது மிருகத்தை மனிதனாக்கும், மனிதனை கடவுளாக்கும்.

—சுவாமி விவேகானந்தா

 

Read Full Post »

Older Posts »