Feeds:
Posts
Comments

Posts Tagged ‘vivekananda life histrory’

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
சீடர்: ‘சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?”
சுவாமி விவேகானந்தர் “உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் “சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா’- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது’ என்று கூறுகிறார்.
அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.
மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், ‘அறிபவனை எதனால் அறிவது?’ என்று கேட்கின்றன.
உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. ‘உணரப்படுகிறது’ என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.
மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!
–சுவாமி விவேகானந்தா …

Read Full Post »

விவேகானந்தரின் வாழ்வில் சில நிகழ்ச்சிகள் – பகுதி 3

நரேந்திரரின் தந்தை விசுவநாத தத்தர்.கொடை என்பது அவரது ரத்தத்தில் ஊறிய பண்பாக இருந்தது. அவரிடம் உதவி கேட்டுச் சென்ற யாரும் வெறும் கையுடன் திரும்பியதில்லை.’வள்ளல் விசுவநாதர்’ என்றே அவர் அந்த பகுதியில் அறியப்பட்டார். உறவினர் நண்பர் என்று ஏராளம் பேர் அவரது வீட்டில் தங்கி அவரது செலவிலேய கல்வியும் பெற்று வந்தனர். தாம் மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல், சம்பாதித்ததைஎல்லாம் பிறருக்காகச் செலவழித்தார் அவர்.

ஆனால் விசுவனடரின் இந்தத் தரள குணத்தை உறவினர் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் குடியும் கேளிக்கைக்களுமாகக் காலம் கடத்தினர். இப்படி குடிகாரர்களுக்கும் நெறி கெட்டவர்களுக்கும் பணத்தைத் தந்தை அள்ளி இறைப்பதை ஒருமுறை நரேந்திரர் தடுத்தார்.அதற்க்கு விசுவநாதர்,’மதுவைக் குடித்து, தற்காலிகமாகவாவது தங்கள் கவலைகளை மறக்க முயல்கின்ற இந்த ஏழைகளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்! நீயும் வளரும்போது இவர்களிடம் இரக்கம் கொள்ளவே செய்வாய்’ என்று கூறினார்.

மனிதனிடம் இத்தகைய இரக்கம் கொள்வது மட்டும் போதாது;அவனைத் தெய்வ வடிவமாகக் கண்டு சேவை செய்ய வேண்டும் என்று கற்பித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். மனிதன் வாழும் கடவுளாகத் திகழ்பவன். கடவுளின் வடிவமான அவனுக்கு இரக்கம் காட்ட முடியுமா? முடியாது.மாறாக, அவனில் வாழ்கின்ற கடவுளுக்குச் சேவை செய்து,வழிபடுவதற்காகக் கிடைத்த ஒரு வாய்ப்பு அல்லவா அது! எனவே ‘இரக்கம்’ என்பது சரியான வார்த்தை அல்ல. மக்களை மகேசனாகக் கண்டு ‘சேவை’ செய்வது, மனித குலத்தையே ஒரு தெய்வீக வெளிப்பாடாக எண்ணி வழிபடுவது – இதுதான் சரியானது. யாரையும் வெறுப்பதர்க்கில்லை. ஏனெனில் பாவியின் உள்ளேயும் உறைபவர் கடவுளே அல்லவா! திருடனாக, காட்டுமிராண்டியாக, அதுபோலவே,நல்லவனாக, சான்றோனாகத் திகழ்வது ஒரே கடவுள்தான்.

இழிந்தவர், ஒதுக்கப்பட்டவர், பாவிகள் என்று அனைவரையும் மரியாதையுடன் பார்ப்பதற்கு இவ்வாறு ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து கற்றுக்கொண்டார் விவேகானந்தர். ‘வேதனையில் தவித்துப் போராடுகின்ற மனிதர்களில் ஒருவருக்காவது சிறுது ஆனந்தமும் அமைதியும் ஒருநாளைக்காவது கொடுக்க முடியுமானால் அதுமட்டுமே உண்மை; வாழ்நாள் முழுவதும் வேதனையில் உழன்று நான் கற்றுக்கொண்ட உண்மை இதுவே’ என்பார் அவர்.

Read Full Post »

விவேகானந்தரின் வாழ்வில் சில நிகழ்ச்சிகள் – பகுதி 2

ஒரு நாள் புவனேசுவரி நரேனிடம், ‘அப்பா, என்றும் தூயவனாக இரு. சுய மரியாதையுடன் இரு, அதே வேளையில் பிறரது சுய மரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மெமையானவனாக, சமநிலை குலையாதவனாக இரு; ஆனால், தேவையேற்படும்போது உன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளவும் தயங்காதே’என்று கூறினார்.

இந்த அறிவுரை நரேந்திரனின் பண்புநலனை உருவாக்குவதில் மிகவும் உதவி செய்தது. சிறுவயதிலிருந்தே அவர் சுயமரியாதை மிக்கவராகத் திகழ்ந்தார் மற்றவர்களை மரியாதையுடன் நடத்தினார். ஆனால் தனது தன்மானத்திற்கு இழக்கு வருமாறு யார் யார் நடந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார். ஒருநாள் அவரது தந்தையின் நண்பர்கள் சிலர், அவர் சிறுவன்தானே என்று எண்ணி, சற்று வேடிக்கையாக நடந்துகொண்டனர். அது நரேனுக்குப் பிடிக்கவில்லை; ‘என்ன இது! என் தந்தை கூட என்னை இப்படி இழிவாக நடத்தியது கிடையாதே!’ என்று எண்ணினார். ஆத்திரத்துடன் நிமிர்ந்து நின்றுகொண்டு, ‘இதோ பாருங்கள்! வயதானவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்றுதான் உங்களைப்போல் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பலர் முட்டாள்களாகவே இருக்கிறார்கள்’ என்று கூறினான். நரேனின் மனநிலையை உணர்ந்த அவர்கள் தங்கள் வேடிக்கைப் பேச்சுகளை நிறுத்திக் கொண்டனர்.

நசிகேதன் என்ற சிறுவனைக் கட உபநிஷதத்தில் காண்கிறோம். அவனும் பயம் அறியாதவன், தன்னம்பிக்கைமிக்கவன். ‘அனைவரிலும் நான் சிறந்தவன். அப்படி இல்லாமல் போனாலும், பலரைவிட நான் சிறந்தவன் என்பதில் ஐயம்ல்லை. ஆனால் ஒருபோதும் நான் அனைவரிலும் தாழ்ந்தவன் அல்ல‘ என்பான் நசிகேதன். அவனது இந்த சுயமரியாதைக்காகவே அவனை மிகவும் போற்றினார் விவேகனந்தர்.

Read Full Post »

விவேகானந்தரின் வாழ்வில் சில நிகழ்ச்சிகள் – பகுதி 1

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தர். செல்லமாக ‘நரேன்’ என்று அழைப்பார்கள். அவரது தாயான புவனேசுவரி தேவி ஊர் உத்தமப் பெண்மணியாகத் திகழ்ந்தார். அவர் நரேனுக்குக் கொடுத்த கல்வி ஈடிணையற்றது. ‘வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்குக் கடமைப்பட்டுள்ளேன்’ என்று பின்னாளில் விவேகானந்தர் கூறுவதுண்டு.

ஒருமுறை வகுப்பில் புவியியல் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் வரைபடம் ஒன்றைத் தொங்க விட்டு ஒரு குறிப்பிட்ட நகரத்தைக் காட்டுமாறு நரேனிடம் கூறினார். நரேன் காட்டினான். ஆசிரியர் அதைத் தவறு என்றார். அதனை மறுத்து ‘சரி’ என்றான் நரேன். தான் சொல்வதை மறுக்கிறான் என்பதற்காக அவனது கைகளை நீட்டச் சொல்லி பிரம்பால் அடித்தார் ஆசிரியர். அடிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டானே தவிர, தனது பதில் தவறு என்பதை புத்தகத்தைப் பார்த்தபோது தனது பதில்தான் தவறு என்பதைக் கண்டார் ஆசிரியர். உடனே நரேனிடம் மன்னிப்புக் கேட்டதுடன், அதன்பிறகு அவனிடம் மிகுந்த மரியாதையுடனும் பழகினார். இதை வந்து தாயிடம் சொன்னான் நரேன். புவனேசுவரி அவனை அணைத்துக்கொண்டு, ‘என் கண்ணே! உன் பக்கம் நியாயம் இருக்குமானால் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். நியாயத்தின் வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக, துன்பம் தருவதாக இருக்கலாம். ஆனால் நியாயம் என்று நீ கருதுவதைச் செய்வதற்கு ஒருபோதும் தயங்காதே. உண்மையின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாதே‘ என்று கூறினார்.

புவனேஸ்வரி தேவி போதித்த உண்மையின் தரண்ட வடிவமாக ஸ்ரீ ராமகிருஷ்ணர் திகழ்வதைக் கண்டார் நரேந்திரர். ‘என்ன வந்தாலும் உண்மையின் பாதையில்தான் செல்ல வேண்டும். இந்தக் கலியுகத்தில் ஒருவன் உண்மையையே பேசிப் பழகுவானானால் அவன் இறையனுபூதி பெறுவது நிச்சயம்’ என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். தாம் போதித்ததை அவர் வாழ்ந்து காட்டவும் செய்தார்.

ஸ்ரீ ராமகிரிஷ்ணரும் புவனேஸ்வரி தேவியும் எது வந்தாலும் அசையா உறுதியுடன் உண்மை வழியில் நிற்பதைக் கண்டிருந்தார் விவேகானந்தர். அவரது அனைத்து செயல்களிலும் இது வெளிப்பட்டது. அதனால்தான் பின்னாளில், ‘உண்மைக்காக அனைத்தையும் விடலாம், ஆனால் எதற்காகவும் உண்மையை விடக்கூடாது’ என்றார் அவர்.

Read Full Post »