Feeds:
Posts
Comments

Posts Tagged ‘barathiyar’

Sister-Nivedita-2சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(பிறப்பு: 1867, அக். 28 – மறைவு: 1911, அக். 13)

1907-ஆம்ஆண்டு நடைபெற்ற பனாரஸ் (காசி) காங்கிரஸ் மாநாடு, பாரதியார் வாழ்வில் பல திருப்பங்களை நிகழ்த்தியது.

அந்த மாநாட்டிற்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் பாரதியாரும் அவரது நண்பர்களும் கல்கத்தாவில் சிறிதுகாலம் தங்கிச் செல்லலாம் என்று விரும்பினார்கள். கல்கத்தாவில் டம்டம் என்ற இடத்தில் பழைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ஆனந்தமோகன் போஸ் என்பவரது இல்லத்தில் தங்கினார்கள்.

ஆனந்தமோகன் போஸின் வீடு பெரிய தோட்டத்தின் நடுவில் இயற்க்கை சூழ மிக ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்தது. தோட்டத்தின் ஒருபகுதியில் பெரியதோர் ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அழகும் சூழ்நிலையும் பாரதியாரைப் பெரிதும் கவர்ந்தன.

காங்கரஸ் மாநாட்டிற்குச் சென்று வந்தபடியால் தேசிய உணர்ச்சி மேலிட்டிருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இரண்டு பாடல்களை எழுதினார்.  அந்த இடம் பாரதியாரை தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவைக்கப் போகிறது என்பதை அவர் அப்போது அறியவில்லை.

பாரதியாரும் அவரது நண்பர்களும் சென்னை புறப்படுவற்கு முன்தினம் ஆனந்தமோகன் போஸ் கல்கத்தாவில் உள்ள தேசபக்தர்களை அழைத்து ஒரு சிறிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தச் சமயம் கல்கத்தாவில் சகோதரி நிவேதிதா தேவி , நிவேதிதா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நடத்தி தேசப்பணியில் ஈடுபட்டுவந்தார்.  ஆனந்த மோகன்போஸ் வீட்டில் அடிக்கடி நடத்தப்படும் ரகசியக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்வார். பாரதியாரும் அவரது நண்பருகாக ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டம் முடியும் தறுவாயில் பாரதி தன்னை நிவேதிதா தேவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக் காட்டினார். பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா தேவி.

இனி அங்கு என்ன நடந்தது என்பதை பாரதியாரே கூறுகிறார்….

“திடீரென்று அவர் (நிவேதிதா தேவி)  மிக மகிழ்ச்சியுடன் வந்து, என் கையைப் பிடித்திழுத்து வீட்டிற்கு வெளியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

நானும் என்னை அறியாமலேயே அவரைப் பின்தொடர,  இருவரும் என்னைக் கவர்ந்த அந்த ஆலமரத்தடிக்கே வந்து நின்றோம். உடனே அன்னை  “அதோபார் பாரதமாதா !” என்றார்.  நான் மிக வியப்புடன் அவர் காட்டிய திக்கை நோக்கி, இரு கண்களும் விரிய விழித்தேன்.

என்னஆச்சரியம்!  என்னை பாரதமாதாவின் சொரூபம் ஆகாயத்தை அளாவி நிற்பதைக் கண்டேன் ! என்மெய்சிலிர்த்தது ! நாதழுதழுத்தது ! அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டேன்…

நிலைபெயராது சிலையாக நின்ற என்னை, அந்தச் சொல்லற்கரிய தேவியின் திவ்யசொருபம் அப்படியே கட்டிப்போட்டு விட்டது.  திரும்பவும் பரிவும் அன்பும் கூடிய நிவேதிதா தேவியின் இனியகுரல் என்னை சுயநிலைக்கு அழைத்தது.

அப்போது நிவேதிதா தேவி,  “பார்த்தாயா ! உன் கவித்திறமையை பாரதமாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள். அன்னையின் விருப்பமும் கட்டளையும் அது தான். உடனே நீ [உன்னை] அர்ப்பணம் செய்து, கிடைப்பதற்கரிய மாதாவின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்” என்று உத்தரவிட்டார்.

நான் மீண்டும் மீண்டும் பலமுறை பாரதமாதாவின் தோற்றம் இருந்த திசையை நோக்கி வணங்கி நிமிர்ந்தேன். அந்தத் தோற்றம் மறைந்தது.  குருமணி தேவி அதே அருளும் அன்பும் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்து நின்றார்.

பாரதமாதாவின் தோற்றமும் தரிசனமும் கிடைத்த இடத்திற்கு அருகில் இருந்த ஆலமரக் கிளையிலிருந்து,  குருமணி நிவேதிதா தேவி ஒரு ஆலிலையைப் பறித்தார். அதை உடனே அவர், உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துத் தொழுது நிற்கும் என்னிடம் ஆசி கூறிப் பிரசாதமாக அளித்தார்.

இந்த அருளும் அனுபூதியும் கிடைத்ததால் தான், என் நாவிலிருந்து பிரசண்டமாருதம் போல் தேசியகீதங்கள்,  தேசபக்தியை ஊட்டுவிக்கும் பாக்கள், தேசத்தைத் தட்டியெழுப்பும் கவிதைகள் வெளிவரலாயின”

-என்கிறார் பாரதி.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிவேதிதா தேவி பாரதியின் வழிகாட்டியாய்,  ஞானகுருவாய் விளங்கினார்.  பாரதியார் அவரை  ‘அன்னை’ என்றே அழைத்தார். குருவின் அருள்பெற்றதும் பாரதி குருஸ்தோத்திரமும் பாடினார்.

அந்த குரு ஸ்தோத்திரம் இது…

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

       கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

       பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

      பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

      நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடலைப் பாடுவதற்கும்,  தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதா தேவியே காரணமாக இருந்தார்.

‘தேசியகீதங்கள்’ நூலின் சமர்ப்பணத்தில் தன் குருவாகிய நிவேதிதா தேவியே அந்தப் பாடல்களுக்குக் காரணமாவர்”  என்று புகழ்ந்து பெருமையுடன் பாரதியார் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

Read Full Post »

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

DOWNLOAD

Read Full Post »

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார் பகுதி 2

உலகிற்க்கெல்லாம் ஒரு புதிய ஒளி கொடுப்பதற்குப் பிறந்த மகான் இவர்!‘ அந்த ஞானியின் திருவுள்ளத்தில் தோன்றிவிட்டது.

அப்போது பரமஹம்சர் நரேன்றருக்கு ஞான நெறி உணர்த்தினார்.அதனால் பிரம்மத்தேனை நரேந்திரரைமுர்ரிலும் அருந்தி, பரஹம்சர் வெற்றிக்கொள்ளும்படி செய்துவிட்டார். அந்த மகா ஞானவெறி, நரேந்திரரைவிட்டு ஒருபோதும் நீங்கவில்லை.

பிரம்மக் கள்ளுண்டு,இந்த நரேன்ட்ரப் பரதேசி பிதற்றிய வசனங்களே இனி, எந்நாளும் அழிவில்லாத தெய்வ வசனங்கலாகப் பெருங்ஞானிகளால் போற்றப்பட்டு வருகின்றன.ஞானோபதேசம் பெற்ற காலம் முதல், நரேந்திரர் தனது பழைய இயல்புகலேல்லாம் மாறிப் புதிய ஒரு மனிதராகிவிட்டார்.

தாய்க்குக் குழந்தையின் மீது இருக்கும் அன்பைக் காட்டிலும், நரேந்திரர் மீது பரமஹம்சர் அதிக அன்பு செலுத்தினர்.
சுமார் ஆறு வருட காலம் நரேந்திரர், தன்னுடைய குருவுடன் செலவிட்டார். இந்த ஆறு வருடங்களில்தான் – உலகம் முழுவதையும் கலக்கத் தோன்றிய அற்புதப் பெரிய எண்ணங்கள் இவர் மனதில் உதித்து நிலைப் பெற்றன.

வேறு பல சாதாரண சந்நியாசிகளைப் போன்று சுவாமி விவேகானந்தர் பெண்களைக் குறித்து தாழ்வான – கெட்ட அபிப்பிராயங்கள் உடையவர் அல்லர்.

எல்லா ஜீவாத்மாக்களும்  – முக்கியமாக எல்லா விதமான மனிதர்களும் – தெய்வங்களைப் போலவே கருதி நடத்துவதற்கு உரியவர்’ என்ற தன கொள்கையை, சுவாமி விவேகானந்தர் மிகவும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

சுவாமி விவேகானந்தர் நம்முடைய நாட்டிற்கு விமோசம் ஏற்பட  வேண்டுமானால் – அதற்கு மூலாதாரமாக நம்முடைய பெண்களுக்கும் பரிபூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வானத்துப் பறவைகள் போல் சுதந்திரமாக இருப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும்,அவர்கள் பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு வேண்டிய பொருளைத் தாங்களே உத்தியோகங்கள் செய்து தேடிக்கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஆண்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில் புரிவதற்கு இடம் தர வேண்டும் என்றும், பெண்களை நாம் பொதுவாகப் பாரசக்தியின் அவதாரங்கள் என்று கருத வேண்டும்.என்றும் கருதினார் என்று தெளிவாகத் தெரிகிறது.

சுவாமி விவேகானந்தரின் கல்வி பெருமையும், அறிவுத் தெளிவும், தெய்வீகமான அன்பும், அவருடைய தைரியமும் மேருமலை போன்ற மனவலிமையும்,அவர் செய்திருக்கும் சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் இருப்பதைக் காட்டிலும் அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே தெரிகின்றன என்று கூறுவது தவறாகாது.

Read Full Post »

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்

ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.

சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்க்கோ எல்லையே கிடையாது.

கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகளையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானன்டரே ஆவார் என்று தோன்றுகிறது.

‘அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பாரசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டால். அவர் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.

‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு இலட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன வெற்றிக் கொடியை நிலைநாட்ட வேண்டும்’ என்று, இறைவனின் சங்கல்பம் இருந்து. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகுதான் வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்.

ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில், நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப் பற்றி, சப்த மேகங்கள் ஒன்றுகூடி மழை பொழிந்ததுபோல் சண்டமாருதமாகச் சொர்போழோவு செய்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வென்று வேர்ரிவீரராக இந்தியாவிற்குத் திரும்பி வருவதற்கு, போஸ்டன் என்ற துறைமுகத்தில் கப்பலில் ஏறினார்.

விவேகானந்தரின் சத்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களே சமீபத்தில் தோன்றி மறைந்த மகான்கள்.

‘இவர்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர்?’ என்று வகுத்துக் கூறுவதற்கு – இது சமயம் இல்லை. அதற்கு நான் தகுதி உடையவனுமில்லை.

சுக்கிர கிரகத்திற்கும். புதன் கிரகத்திற்கும் உள்ள உயர்வு – தாழ்வு பற்றிப் பேசுவதற்கு, பாறைக்குள் இருக்கும் ஒரு தேரைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?

சுயலாம், ஆசை, அச்சம் என்ற குணங்கள் நிறைந்த உலக மாயை என்ற பாறைக்குள் இருக்கும் தேரையாகிய நான் – ஞானம் என்ற ஆகாயத்தில் சர்வ சுதந்திரமாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் ஜோதி நட்சத்திரங்கலாகிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கேசவசந்திரர் முதலானவர்களின் உயர்வு தாழ்வு பற்றி எப்படி வகுத்துச் சொல்ல முடியம்?

ஆனால் அந்தப் பாரையிளிருந்தும் ஒரு சிறிய பிளவின் மூலம், ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஒளியைப் பார்த்து மகிழும் தன்மை தேரைக்கும் இருக்கலாம் அல்லவா?

அதுபோல் எனக்குத் தெரிந்த வரையில் விவேகானன்டச் சுடரின் பெருமையைச் சிறிது பேசத் தொடங்குகிறேன்.

உண்மையான புருஷத்தன்மையும், வீரநேரியும் மனித வடிவம் எடுத்தது போல் அவதரித்தவர் விவேகானந்தர். அவருக்கு அவருடைய தாய் தந்தைகள், ‘விரேஸ்வரன்’ – ‘நரேந்திரன்’ என்ற பெயர்கள் வைத்தது, மிகவும் பொருத்தமானது அல்லவா?

‘இந்த ஜகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்று மில்லை’ என்ற மகத்தான கொள்கையை, உலக மக்களுக்கு எடுத்துப் போதனை செய்வதற்கு வந்த இந்த மகான், ‘இந்த ஜகத்தில் தெய்வமே கிடையாது ‘ என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இந்தக் கொள்கைச் சிறிது காலத்திற்குப் பிறகு அவரிடமிருந்து நீங்கிவிட்டது.

தட்சிணேஸ்வரம், கல்கத்தாவுக்கு வடக்கில் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது இந்த தட்சிணேஸ்வரத்திற்கு  நரேந்திரன் ஒரு நாள் சென்று, மகாஞாநியைத் தரிசித்தார். அந்த ஞானிதான் புகழ் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று சொல்ல வேண்டியதில்லை.

தொடரும்…

Read Full Post »

புத்தியிலே சார்பு எய்தியவன்,இங்கு நற்செய்கை, தீச்செய்கை

இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோக நெறியிலே

பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை,2-

ஆம் அத்தியாயம், 50- ஆம் சுலோகம்.)

Download

Read Full Post »