Feeds:
Posts
Comments

Archive for the ‘E-Books’ Category

ஆண்டவா, என்னை ஆச்சாரியனாக்கு!

  •  கல்வி புத்தாண்டைத் தொடங்கும் புத்திளம் புஷ்பங்களே! உங்கள் பள்ளி வாழ்வை வளமாக்க, மங்களப் பொருள்களுடன் உங்களை வரவேற்கிறேன், வாருங்கள்!
  •   படிப்பும், மார்க்கும் வரவில்லை என்று சென்ற ஆண்டில் வாழ்வை முடித்துக் கொண்ட மாணவர்களுக்காக இன்று நாம் அனைவரும் பிராத்திப்போம்.

இந்த மோசமான நிலை எங்கும், என்றும் தொடராதிருக்க, சிலவற்றைச் சிந்தித்து வைத்திருகிறேன். என்னோடு சேர்ந்து சிந்திக்க வாருங்கள்.

  •   என் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள மாணவர்களே! மேற்கூறிய பிரச்னைகளைத் தீர்த்திட, பொறுப்பை உங்கள் தோள் மீது ஏற்றிக் கொள்ள உங்களை வரவேற்கிறேன்.
  •   இனி நீ பாடசுமையை உணராதபடி சுவையுடன் பாடம் நடத்துவதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டுள்ளேன்.
  • இனி உனது மதிப்பெண்ணை மட்டுமே வைத்து உன்னை மதிப்பதைவிட, உன் தனித்திறன் என்னவென்று கண்டுபிடிப்பதில்தான் என் திறமையே உள்ளது.
  •   ஜுரத்தில் சில தினங்கள் படுத்த பிறகு, நீ பள்ளிக்கு வந்ததும் இனி உன்னிடம் ‘லீவ் லெட்டர் எங்கே?’ என கேட்காமல், ‘இப்போது நீ நலமா?’ என்று கேட்ட பின்பே லீவ் லெட்டரை நினைவுபடுத்துவேன்.

வகுப்பு நிர்வாகம் என்பது முக்கியம்தான். ஆனால் உன் மனநலனும் நட்பும் எனக்கு மிக மிக முக்கியம்.

  •  மாணவ மாணவியே, நீ பள்ளியில் பிறர் அறியாமல் அலைபேசியில் அட்டகாசம் செய்யும்போதும்….,

கிரிக்கெட், இணையதளம், திரைப்படங்கள் என்று பவர்ரிலும் உன் கவனம் ஈர்க்கப்படும்  போதும்….,நான் ஒன்றைக் கற்றேன். அதனால்…., நான் நடத்தும் பாடம் உன் காதுக்கு மட்டுமே போய்ச் சேர்வதாக இனி இருக்காது.

மாறாக, உன் எல்லாப் புலன் அறிவுகளையும் ஈர்க்கும் வகையில் அன்பைக் கூறியோ, செய்து காண்பித்தோ, வேறு வகையில் புரிய வைத்தோ பாடங்களை நடத்தலாம் என்று திட்டமிடுகிறேன்.

  •  இனி வகுப்பில் நான் மட்டுமே பாடம் நடத்துபவராக இல்லாமல், கற்பதையும் கற்பிப்பதையும் நீயும் நானும் சேர்ந்து ஓர் இனிய செயலாக மாற்றிவிடுவோம், வா!

எப்படி ? உனக்கு கிரிக்கெட் பிடிக்குமென்பதால் உன் பாணியிலேயே ஒன்று கூறுகிறேன்.

நீ பந்தை விலாச நிற்கும் ,ஸ்ட்ரைக்கர்’ என்றால் நான் உன் எதிரில் காத்திருக்கும் ‘நான் – ஸ்ட்ரைக்கர்!’

உன் எதிரிலுள்ள நான், வகுப்ப எப்படி வளப்படுத்தலாம் என்று உறுதி கொண்டுள்ளேன்!.

  •   பாடங்களை நடத்தும் போது நீ கேட்பவனாக மட்டுமே இருப்பதால் தான் போரடிக்கிறது. நாம் இருவரும் கலந்து கற்றால் பாடத் திட்டத்தைச் செயல்திட்டமாக மாற்றிவிடலாமே!
  •   என் வகுப்பில் நீ துங்கி விட்டால் நீ என்னை மதிக்க வில்லை என்று கருதி வந்தேன். ஒரு மாற்றுச் சிந்தனையாக உன் கவனைத்தை ஈர்க்க என்ன வெள்ளம் செய்யலாம் என இனி நினைத்துப் பார்ப்பேன்.
  •   வாலிப வயதில் உன் விளையாட்டுப் புத்தியை மேம்படுத்த, உன்னை மன இறுக்கத்தில் வருந்தவிடாமல், விளையாட விடுவேன்.
  •  உனக்கு தெரியுமா, நீ உன் வீட்டில் கண்டிப்பாக ‘ஹோம் ஒர்க்’ செய்ய வேண்டும் என்பதற்காக, நானும் உனக்காக ‘ஹோம் ஒர்க்’ செய்து வருகிறேன் என்று?
  •   நீ என்னிடம் இயல்பாகப் பேசாமல்,என்னிடம் சரளமாகப் பழகப் பயந்தால் எனக்கு வருத்தம் ஏற்படும்.

நீ என்னிடமிருந்து தள்ளி நின்றாலோ, என்னிடம் என் கற்பிக்கும் முறையிலும் என்ன குறை என யோசிப்பேன்.

  •   மாணவர்களே, உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டிய உறவுமுறை – பாலுக்கும் நெருப்பிற்கும் உள்ளது போன்றது.

அக்னி சுதேர்ருவதோ பாத்திரத்தை!

பால் இருப்பதோ சூடான பாத்திரத்தில்!

ஆசிரியர் – மாணவர் இருவரது கவனமும் பாத்திரத்தில்தான் ! ஓட்டை  யற்ற பாத்திரத்தில் நான் ஆர்வமெனும் அக்னியைச் செலுத்துகிறேனா  என்பதில் என் கவனம்.

சத் பாத்திரத்தில் உள்ள பாலைப்போல, மாணவ – மாணவியாக நீ இருக்க வேண்டும் என்பதில் உன் கவனமும் இருக்கட்டும்.

  •   நீ வகுப்பக் கவனிக்க வேண்டுமென்றால், விளையாட்டு மைதானத்தில் குதூகலமாகக் குதித்தாடு. அங்கு நீ உடலால் குதிக்க வில்லை என்றால், வகுப்பில் உன் மனம் அங்குமிங்கும் அலைகிறது என்பதை நான் உணர்வேன்.
  •   நீ படிக்க வேண்டிய பாடங்கள் பலப் பல. எனக்கு நேரமில்ல என்றுதான் நானும் பலர் கூறுவது போல் நம்பியிருந்தேன்.ஆனால் ‘நீ என்னை நம்பிக் கற்க வந்தவன்’ என்ற ஓர் எண்ணமே எனக்குப் புதுச் சக்திகளை வழங்குகிறது.
  •   தம்பியே! நீ நுலகத்தை நன்கு பயன்படுத்து வதைப் பார்த்தால், நான் பெரும் ஆனந்தம் கூற முடியுமா?
  •  உங்களைக் கோவிலில் பார்த்தால், ‘இறைவா,என் மாணவர்களைச் சிறந்தவர்களாக்கு’ என் உங்களுக்காக என் மனம் வேண்டிக் கொள்ளும்.
  •  நீ வாலிபன் / யுவதி என்பதை மறந்து, நான் சில சமயத்தில் சற்றுக் கடுமையாக உன்னிடம் பேசி விட்டாலும், நீ அதைப் பெரிதுபடுத்தாதபோது…, எனக்கு எப்படிப்பட்ட  பெருமை   தெரியுமா?
  •   மாணவனே, நீ நினைக்கலாம் உன் விஷயத்தில் நான் மிகவும் விட்டுக் கொடுக்கிறேன் என்று! மற்ற ஆசிரியர்களும் மாணவர்கள் விஷயத்தில் நான் பணிவதாக நினைக்கலாம்.

ஆனால் மாணவனே, ஆசிரியர் எனும் நிலத்தில் வளர வேண்டிய வீரியமுள்ள விதை நீ. விதை வேரூன்றும்போது எந்த நிலமாவது விதை தன்னை மிதிக்கிறது என்று நினைக்குமா, சொல்!

  •   எனக்கே தெரிகிறது, நடத்தும் பாடத்தில் நான் தெளிவாக இருக்கும்போது மாணவர்களே, நீங்கள் மிக மரியாதையுடன் என்னிடம் நடந்து கொள்வது!
  •   தன்னம்பிக்கையுடன் நான் இருந்தால்தான், உங்களுள் சிலர் வாலாட்டாமல் இருக்கிறீர்கள். அந்த வாழை அடக்க, என் அறிவெனும் வாளைக் கூர் தீட்டி வைத்திருந்தால்தான் அது சாத்தியமாகிறது என்பதையும் காண்கிறேன்.
  •   மாணவ – மாணவிகளே! உங்களுள் ஒருவர் மட்டும் ‘டாப்பர்’ ஆகி – அது ‘பேப்பரில்’ வந்துவிட்டால் அதில் எனக்குப் பெருமையிருப்பதாக நான் நினைக்கவில்லை.
  •   இனி, பாட அறிவு என்ற பலம், அது தரும் தைரியம், அதை புகட்டக் கூடிய பண்பு ஆகியவற்றுடன் உன் வகுப்பில் நிமிர்ந்து நிற்பேன். பாடம் கற்க நீ அமைதியாக அமர மாட்டாயா என்ன?
  •   உன் ஆர்வத்தைத் தட்டிவிடாமல், பாடத்தைப் பகட்டுவது துங்கும் குழந்தையின் வாயில் தேனை ஊட்டுவது போல! அதனால் பயனுண்டா என்ன?
  •   உனக்கு ஒரு பிரச்சனை வந்தால், அதை நீக்க நீ யார் யாரையோ, எதை எதையோ தேடி ஓடுகிறாய். உன் நன்மைக்காக நான் உள்ளேன் என்பது உனக்கு அப்போது ஞாபகம் வராவிட்டால் – உன் நம்பிக்கையை நான் பெறவில்லையே என வருந்துவேன்.
  •   மறதி மாணவன் – சிந்திக்கக் கற்காதவன் – தாழ்வு மனப்பான்மை கொண்டவன் – படிப்பே போரிங் என்பவன் – டென்ஷன் பேர்வழி – பரீட்சை பயந்தாங்கொள்ளி – இவர்களுக்குக் கற்பது களிப்பானது என்று காட்டித் தருவதில்தான் இனி என் கரிசனம் எல்லாம்.
  •   வகுப்பில் சில மாணவரை மட்டும் outstanding  என்று துக்கி வைப்பதும், மற்றவரை stand  outside என்றுதள்ளி வைப்பதும் தான் இன்றைய கல்வியின் அவலநிலை. இதன் தாக்கத்தை நான் என் வகுப்பிற்குள் அண்டவிட மாட்டேன்.
  •   வாருங்கள்! உங்களது, கவனம் Mark -கிலும் என் போன்ற ஆசிரியர்களது கவனம் Remark  – கிலும் இருந்தது போதும்.

இனி,  You Are Remarkable என்ற நிலைக்கு வருவதில்தான் உனது கவனமும் எனது முயற்சியும் இருக்க வேண்டும். ஆசிரயரான நான் உன்னை அந்த நிலைக்கு உயர்த்துவேன்.

  •   இந்த மாபெரும் அறப்பணியான  ஆசிரியப் பணியில் மேற் கூரிய வற்றைக்  கடைபிடிக்க நானும் என்னைப் போன்ற ஆர்வமுள்ள ஆசிரியர்களும் ஆண்டு முழுவதும் முயற்சி செய்வோம்.

எங்கள் இஷ்டதெய்வங்களிடம் வேண்டுவோம்.

மாணவர்களே! எங்களது இந்த முயற்சிகள் வெற்றி பெற உங்களது ஒத்துழைப்பும் மிகமிக அவசியம்!

அதன் மூலம் நாங்கள் ஆசிரியர்களாக மட்டும் இருந்து விடாமல், மேலான பொறுப்புணர்வு மிக்க குரு நிலையில்நின்று உங்களை வழிநடத்தும் ஆச்சாரியர்களாக மாறுவோம்!

அதற்கு ஆண்டவா, எங்களுக்கு அருள்புரிவாய்!

–  நன்றி ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்.

Read Full Post »

 

  • பகவத் கீதை மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25ம் அத்தியாயம் தொடக்கமாக 42ம் அத்தியாயம் முடிய பதினெட்டு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது.
  • கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்கள், அர்ஜுனன் பேசுவது 57, சஞ்சயன் பேசுவது 67, ஒரே ஒரு ஸ்லோகம் திருதராஷ்டிரன் சொல்வதாக உள்ளது. இதற்கு ஒரு ஸ்லோகம் கூட உண்டு:

    ஷட்சாதநி ஸவிம்சாதி ச்லோகானாம் ப்ராஹ கேசவ: |

    அர்ஜுனஸ் ஸப்தபஞ்சாசத் ஸப்தஷஷ்டிந்து ஸஞ்ஜய: ||

    த்ருதராஷ்ட்ர: ச்லோகமேகம் கீதாயா: மாநமுச்யதே ||

பாரதம் ஐந்தாவது வேதம் (பாரத: பஞ்சமோ வேத:),  என்பது வழக்கு. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. இதில் ஞான காண்டம், ஆத்மாவைக் குறித்த ஆராய்ச்சிகள் இடம் பெரும். ஞான காண்டத்துக்கு உபநிஷத் என்றும் பெயர் உண்டு.  அதே போல பாரதத்தில் ஞான காண்டமாக கீதை விளங்குகிறது. கீதையை ஓதினால் உபநிஷதங்கள் அனைத்தையும் கற்ற பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • சமஸ்க்ருதத்தில் கீதம் என்கிற சொல் நபும்சக லிங்கம். ஆனால் பகவத் கீதா என்ற சொல்லில் கீதா என்பது ஸ்த்ரிலிங்கமாக இருக்கிறது. வேதங்களில் ஞான காண்டமான உபநிஷத் என்கிற பெயர் கூட ஸ்த்ரி லிங்கம் தான்!
  • கீதையில் நான்காம் அத்தியாயம் வரை கிருஷ்ணன், அர்ஜுனனின் நண்பனாக பேசுகிறார். அதற்கு மேல் உள்ள அத்தியாயங்களில் கடவுளாக பேசுகிறார்.
  • கீதையை விண்ணை முட்டுகிற ஒரு அழகிய அலங்கார வளைவு (arch) போல உருவகித்தால், முதலில் போர் சம்பந்தப் பட்ட காட்சிகள் அந்த அலங்கார வளைவின் பூமியில் பதித்த ஒரு காலாக துவங்கி, நடுவில் விண்ணை முட்டுகிற நிலையில் தத்துவ அலசல்களாக வளர்ந்து (அங்கே போர் சம்பந்தமான பேச்சு இல்லை), இறுதியில் பூமியில் பதிந்துள்ள அலங்கார வளைவின் இன்னொரு காலாக போர் சம்பந்தப் பட்ட காட்சிகளுக்கு வந்து சேருகிறது.
  • கீதைக்கு சம்பிரதாய தரிசன உரைகள் தவிர்த்து, தென்னாட்டில் பாரதியாரின் உரை பெருமை வாய்ந்தது. அதே போல ராஜாஜியின் “கைவிளக்கு” என்னும் உரையும்,   பால கங்காதர திலகரின் “கர்ம யோகம்” என்கிற உரையும், மகாத்மா காந்தி எழுதிய “அநாஸக்தி யோகம்” என்கிற உரையும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு பிரசித்தமாக உள்ளன.
  • கீதையில் (1:6) மகாரதன் என்று கூறப் படும் வீரன், தன்னையும், தன் தேர் சாரதி, குதிரைகளையும் பகைவரின் ஆயுதங்களால் அடிபடாமல் காப்பாற்றிக் கொண்டு, பதினாயிரம் வீரர்களுடன் போர் செய்பவன்.

மஹாரதா: ஏகாதசஸஹஸ்ராணி யோதயேத் யஸ்து தந்விநாம் |

சஸ்த்ரசாஸ்த்ரப்ரவீண: ச விஜ்ஞேய: ஸ: மஹாரத: ||

  • கீதையில் வரும் யோகம், க்ஷேமம் என்கிற வார்த்தைகளுக்கு பொருளாக, அடையாததை அடைதல் யோகம் என்றும் அடைந்ததைக் காத்தல் க்ஷேமம் என்றும் இவ்விரண்டையும் இறைவன் அளிக்கிறான் என்று கீதையில் சொல்லப் படுகிறது.
  • கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில், முதல் ஆறு ஜீவாத்ம தத்துவமாகவும், இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் பரமாத்ம தத்துவமாகவும், மூன்றாவது ஆறில் இவற்றின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.
  • துர்யோதந: என்ற பெயருக்கு தீய வழியில் போர் புரிபவன் என்று பொருள் உண்டு. யுதிஷ்டிர: என்ற பெயருக்கு போரில் நிலையாக /யுத்தத்தில் ஸ்திரமாக இருப்பவர் என்று பொருள்.
  • பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சங்குக்கு பெயர் பாஞ்சஜன்யம் – இது பஞ்ச ஜனன் என்கிற அரக்கனைக் கொன்று அவன் எலும்பில் இருந்து செய்யப் பட்டது என்று கூறப் படுகிறது. அர்ஜுனனின் சங்கு தேவதத்தம் தேவர்களால் கொடுக்கப் பட்டது என்று பொருள். பௌண்ட்ரம் என்பது “புடி கண்டநே” என்கிற தாதுவிலிருந்து, எதிரிகள் மனதை பிளப்பது என்று பொருள் படுகிறது.

Read Full Post »

பதஞ்சலியின் யோக சாஸ்திரம்

ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன சாங்க்யம், யோகம் நியாயம், வைசேஷிகம் பூர்வ – உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது முதலில் யோகா விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரன்யகர்பர். பதஞ்சலி அதை சுத்திர வடிவமாக்கினார் யோகா சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும். வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் , வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள் .

இந்த பதஞ்சலி யோகா சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு

யோகம் என்றால் யோகா ஆசனகல்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள் ஐக்கியம்;ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம் இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற திஷை கிடைத்தவருக்கே உரித்தாகும் இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது பல போலிகளும் வந்தாகிவிட்டது.

பதஞ்சலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார் அவை இங்கு பதியப்படுகின்றன சமஸ்கிருத மூலமும் தமிழில் சுக்கு மிளகு திப்பிலி ரீதியில் எழுதப்பட்டுள்ளது. பொருள் எளிய  முறையில்  புரிய  வைக்க  முயன்று  இருக்கிறேன். இதுதான் பொருள் என்று இல்லை. ஆழ்ந்து யோசிப்போருக்கு வேறு பொருள் கிட்டக்கூடும்.

இது ஒரு கிராஷ் கோர்ஸ் இல்லை. விடாமுயற்சி உள்ளவருக்கே இது பயனாகும். பர்ரின்னையும் அப்பியாசமும் மிக அவசியம் நமக்கு இதை அடையவே பேரு முயற்சி வேண்டும் படித்து உடனே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நிதானமாகவே படிக்க வேண்டும் கலைச்சொற்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் ஏனெனில் அது அடுத்த வரிகளில் வரும். அப்போது இது என்ன என்று விழிக்கக்கூடாது. இது தியரி மட்டுமே பயிலுவதற்கு ஒரு குரு அவசியம் தேவை தயை செய்து யாரும் குரு மேற்பார்வை இல்லாமல் முயற்சி ஆரம்பித்து அவாத்தை பட வேண்டாம். அப்படி ஒன்றும் செய்யவும் முடியாது ஏன் பின்னே இதை பதிக்கிறேன் எனில் எதோ ஒரு தூண்டுதலாலேயே. யாருக்கோ பயன்படும் .

patanjali part1

patanjsali part2

patanjsali part3

patanjsali part4

DOWNLOAD

Read Full Post »

பாரத மாதா

ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதிதரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கன மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே!

DOWNLOAD AUDIO MP3

ஜன கன மன அதிநாயக ஜய ஹே – மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Read Full Post »

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

DOWNLOAD

Read Full Post »

நடையாக நடந்தார் நரேந்திரர்
நாடெல்லாம் நலமுற நல்லறம் ஒங்க

இடைவிடாது இறைபணியாற்றிய
ஈடிணையில்லா ஆன்மிக வள்ளல்
பசியாலும் பிணியாலும் பரிதவிப்போர்க்கு
பரிந்தோடி பணி செய்ய பாதங்கள் நோக

குருவின் ஆணையை சிரமேற்கொண்டு
நிர்விகல்பத்தை நிமிடமாய் துறந்து
நலிந்தோரின் நலம் நாடி நடமாடுகின்ற
நல்லால மரம் போல நிழல் தந்து உதவ.

 

Read Full Post »

சன்யாஸி கீதம்

1. எழுக வலிமிகு வீரத் துறவியே

இனிய சுரத்தில் அமிழ்ந்திடு

பணித்த மலைக்குகை கருத்தவனத்திடை

யாவும் அதனில் பிறப்பது

காசும் காமமும் பேரும் புகழும் அந்த

அமைதியைக் குலைக்குமோ?

உலகின் வெகுதொலை புவனத்தளைகள்

யாதுமதனை எட்டுமோ?

அறிவு மெய் எனும் இரண்டும் சேர்ந்தொரு

ஆனந்தநதி பாய்ந்திடும்

உயர்ந்த சுரத்தினை உறுதிடத்துடன்

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

2. நிலைத்த உறுதிகொள் வீரத்துறவி!

கீழ்மைத் தளைகளைத் தகர்த்திடு

மின்னும் பொன்னோ கரிய இரும்போ

தளைகள் தளைகளே என்றறி

நன்மை-தீமை,அன்பு-வெறுப்பு இருமை

யாவும் கட்டுக்கள்

அன்பு புரிகினும் அடித்து நொறுக்கினும்

அடிமை அடிமையே வேறிலை

தங்கத்தளையதுவாயினும் அது

பிணைக்கும் வலிவில் குறைவில்லை

உடைத்து ஏறி அதை உருதிடத்துடன் வீர

சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

3. கொள்ளிவாய்ப் பேய் சிமிட்டி ஒளிர்ந்து

அடர்ந்த காரிருள் சேர்த்திடும்

அடைய இயலா இழக்காது அந்த அடரும்

இருளை விளக்கிடு

பிறந்து இறத்தலும் இறந்து பிறத்தலும்

ஆசையாலே விளைவது

நிறைவு அற்ற இதனை ஒழிப்பின் கொடிய

இருள்  மாய்ந்தோடிடும்

தன்னை வெற்றி கொள்பவனே

அனைத்தும் வெற்றி கொள்கிறான்

இதனையறிந்து இணங்கிடாது

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

4. வினை விதைத்தவன் அதையறுப்பான்

நன்மை விதைத்தவன் நன்மையையும்

தீது விதைத்தவன் தீதறுப்பான்

யாரும் விதிவிலக்கில்லையே

எங்கு காரணம் என்று உள்ளதோ

அங்கு காரியம் உள்ளது

உருவெடுப்பவன் தளைபுனைவான்

விதியின் லீலை நிச்சயம்

உருவும் பெயரும் கடந்து நிற்பது

என்றும் சுதந்திர ஆன்மமே

அதுவே நீயென உணர்ந்தறிந்து

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

5. தந்தை தாயென மழலை மனைவி

நண்பன் என்றென நினைப்பவர்

வெற்று கனவுகள் காண்பவர் அவர் அறுதி

உண்மையை அறிகிலர்

பாலெனும் ஒரு பகுப்பு இல்லா ஆத்மன்

யாருக்கு தந்தை தாய்

நண்பன் யாரோ, பகைவன் யாரோ,

யாரின் குழந்தையாவது

நீக்கமறவே நிறைந்த ஆன்மா

அன்றி வேறொன்றிங்கிலை

‘தத்வமசி’ யென உணர்ந்தறிந்து

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

6. யாவுமறிந்த ஆத்ம னென்பது

ஏகமாயெங்கும் நிறைந்தது

பேரிலாதது உருவிலாதது

களங்கமற்றது ஒன்றதே

ஆத்மனுள் திகழ்மாயையே

இந்த மாறுங்கனவுகள் காண்பது

காட்சியாயிந்த ஜீவனாய்

ஒரு சாட்சியாயது நிற்பது

அந்த தூய பொருளே நீயேனும்

அனுபவத்தை அடைந்திடு

அதுவே நீயென உணர்ந்தறிந்த பின்

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

7. எங்கு எங்கோ தேடுகின்றாய்

உற்ற சுதந்திரம் தன்னையே

இந்த உலகம் ஈந்திடாது,

நண்பனே இதை கேட்டிடு !

கற்ற நூலிலும் இறைவன் மனையிலும்

தேடுதல் அது வீண் செயல்

உன்னை மாய்க்கும் பாசக்கயிறை

பற்றியுள்ளது உன்கரம்

பிடியை உதறித் தள்ளிடு

நீ புலம்பும் துயரை ஒழித்திடு

பற்றை நீக்கி உறுதிடத்துடன்

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

8. மங்களம் இனி எங்கும் என்று

யாண்டும் நீ பறைசாற்றிடு

‘தீமை என்னால் உயிருக்கில்லை’

என்று உலகிற்குணர்த்திடு

உயர்ந்தவிடத்தும்  தாழ்ந்தவிடத்தும்

மேவி உள்ள ஆத்மன் நான்

இம்மை-மறுமை, சொர்க்கம்-நரகம்,

ஆர்வம்- அச்சம் அனைத்தையும்

உழலும் உலகம் விடுத்து யாவும்

துறந்து பாரில் நின்றிடு

பந்த பாசத்தை வெட்டியெறிந்து

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

9. வீழினும் உடல் வாழினும்

அதை மதித்திடாதிரு துறவியே

தேகப்பணியும் முடிந்தது அதை

கர்ம வெள்ளம் இயக்கட்டும்

ஒருவர் மாலை சூட்டட்டும்

இன்னொருவர் உடலை உதைக்கட்டும்

புகழ்பவர் – புகழப்படுபவர்

இகழ்பவர் – இகழப்படுபவர்

அனைத்தும் ஒன்றே, உன்னை

அவை  தீண்டிடாது என்றறி

மனதில் பூரண அமைதி கொண்டு

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

10. எங்கு காமமும் பெயரும் புகழும்
ஆசை நினைவுகள் உள்ளதோ
உண்மை ஞான ஒளியின் கிரணம்
அங்கு விழுவது இல்லையே
பெண்ணை மனைவியென்னும்
எண்ணம் பூரணத்தைக் குலைத்திடும்
சொற்ப பொருளும் அற்ப கோபமும்
மாயக்கதவை மூடிடும்
மாயக் கதவை உடைத்திடு
நீ நேய ஆத்மனை அடைந்திடு
தூய மனத்துடன் உறுதிடத்துடன்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

11. வீடு உனக்கு இல்லை நண்ப

எந்த வீடுனை தாங்கிடும்

வானமே உன் கூரையாகும்

கோரைப்புல்லே மெத்தையாம்

நன்று தீதென ருசித்திடாமல்

கிடைத்த உணவை உண்டிடு

தன்னைத் தானே அறியும் ஆத்மனை

அன்ன பானம் என் செய்யும்

உருண்டு ஓடும் தூயநதிபோல்

திரண்டு விடுதலை பெற்றிடு

வெற்றி நமதே என்று எங்கும்

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

12. உண்மை பொருளை சிலரேயறிவர்

மற்றவர்கள் தூற்றுவர்

எள்ளி நகைப்பர். ஆயினும் அதை

செவி மடுத்தாதிருந்திடு

என்றும் சுதந்திரனாய் இரு பலர்

மாயைத் திரையை அறுத்திடு

துன்பம் கண்டு அஞ்சிடாமலும்

இன்பந்தன்னைத் தேடிடாமலும்

இருமையிவைகளை விடுத்து நீயும்

கடந்து மேலே சென்றிடு

உறுதிடத்துடன் ஆன்ம பலத்தை

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

13. கருமத்தளைகள் முழுமையாக

நீங்கும் வரையில் உழைத்திடு

முயற்சி மூலம் ஆத்மனுக்கு

சுதந்திரத்தை அளித்திடு

பிறவியில்லை மனிதமில்லை

தெய்வமென்றொன்றில்லையே

நீயுமில்லை நானுமில்லை ஆத்மன்

ஒன்றே நிலைப்பது

எங்கும் நானே, நானே எங்கும் என்ற

உண்மையை உணர்ந்திடு

அந்த ஆனந்த நிலையை அடைந்து

முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்

-சுவாமி விவேகானந்தர்

Read Full Post »

அக்னிச் சிறகுகள்


நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்
பற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…
தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்
கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…
இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார்.
இது இவர் கதை மட்டுமல்ல.
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை…
சோதனைகளின் சாதனைக் கதை…
உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை…
தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை…
தீர்க்க தரிசனத்தின் கதை…
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை.
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை!

எ.பி.ஜே.அப்துல்  கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக உங்களுக்காக  வழங்குகின்றேன். பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

DOWNLOAD

Read Full Post »

The Biggest collections of Swami Vivekananda Quotes

  • When there is a conflict between the heart and the brain, let the heart be followed.

  • A man of intellect can turn into a devil, but never a man of heart.

  • Religion is not a theoretical need but a practical necessity.

  • Renunciation does not mean simply dispassion for the world. It means dispassion for the world and also longing for God.

  • There is no misery where there is no want.

  • The secret of life is not enjoyment, but education through experience.

  • Every new thought must create opposition.

  • Renunciation is the withdrawal of mind from other things and concentrating it on God.

  • Every man who thinks ahead of his time is sure to be misunderstood.

  • In this short life there is no time for the exchange of compliments.

  • Do not wait to cross the river when the water has all run down.

For more Quotes Download below

 

DOWNLOAD

 

Read Full Post »

சுவாமி சுகபோதானந்தா அவர்களின்……

“MANASE RELAX PLEASE.”

[மனசே தயவு செய்து ஓய்வெடு.]

சுவாமி சுகபோதானந்தா
தெளிவு பெற்ற ஓர் ஆன்மீக குரு. “LIFE” (Living in Freedom & Enquiry Programme) மற்றும் YPL(Yogic Linguistic Programming) முறைகளை உருவாக்கியவர். பழுத்த வேதாந்த அனுபவம் கொண்ட மேலாண்மை குரு.
சுவாமிஜி இங்கிலாந்தில் அத்தாட்சி பெற்ற NPL முறை பயிற்சியாளராக இருந்தவர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய போதனா முறைகளில் ஆழ்ந்த ஞானம் உண்டு. மகத்தான பாரம்பரிய ஆசான்களிடம் பயின்ற இவருக்கு அதிநவீன மேலாண்மை உத்திகளுடன் தொடர்ந்து வரும் தொடர்பு உண்டு. முன்னணி தொழிலகங்கள், தங்கள் அதிகாரிகளுக்காக “IN HOUSE WORKSHOP” நடத்த இவரை அழைக்கிறார்கள். சுவாமிஜியின் “LIFE” என்றபெயரில் புகழ்பெற்ற SELF DEVELOPMENT PROGRAMME துணை கொண்டு கூட:டாண்மைத் துறையில் பலரும், ஏராளமான பொதுமக்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். கூட்டாண்மைத்துறைக்கென்றே விசேசமாக HARMONY & CREATIVITY AT WORK என்ற முறையை சுவாமிஜி அமைத்திருக்கிறார். தியான முறையில் அறிவியல் கண்ணோட்டம் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இளைஞர் முகாம்களை நடத்தி வருகிறார்.
இவற்றைத்தவிர, சுவாமிஜியின் ஊக்குவிப்புடன் வழிகாட்டுதலுடனும் பிரசன்னா டிரஸ்ட், ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரசன்ன ஜோதி என்ற அனாதை இல்லமும் நிர்குண மந்திர் என்ற தியானப்பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறது.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இவரது புத்தகம் முன்பு எப்போதும் கண்டிராத சாதனை படைத்திருக்கிறது. அதன் ஒலிவடிவத்தை இங்கே தருகின்றோம்.

குரல் கொடுத்தவர்:- “நிழல்கள்” ரவி

DOWNLOAD PDF

DOWNLOAD AUDIO

PART -1

PART -2

PART -3

Read Full Post »

Older Posts »