Feeds:
Posts
Comments

Archive for the ‘விவேகானந்தர் பாடல்’ Category

சாஸ்திர  சாரத்தை நீயும் தரணிக்கு தந்தாயே
யோகமும் தியாகமும்
திரண்ட உருவே விவேகானந்த

குகையிலும் வனத்திலும் மறைந்த வேதம்
நடைமுறை வாழ்க்கையில் விழித்து எழுந்திட  |
ஒவ்வொரு  மனிதனும் தன்னுள் உணர
ஆத்திக வானில் நம்பிக்கை உதித்திட ||

விழிகள் மூடிய வறட்டு தியானம்
கரிய இருளில் மனத்தை ஆழ்த்திட |
விழிகளை திறந்து வழியும் காட்டி
ஜீவ வடிவினில் சிவனை வழிப்பட ||

புதிய பாரதம் புலர்ந்தது இன்று
தேச லட்சியம் புரிந்தது நன்று |
வீறு கொண்ட பல இளைஞர்கள் கூட்டம் 
சேவை யோகத்தில் சாதனை செய்திட  ||

Read Full Post »

விவேகானந்தரை நினைத்திடுவோம் |
விவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||
தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம் 
தெய்வத்தொண்டில் சிறந்திடுவோம் |
விவேகானந்தரின் நெறியில் நின்றே 
ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||
தொண்டும் துறவும் போற்றிடுவோம் 
இதயத்தைக்  கோயில் ஆக்கிடுவோம் | 
விவேகானந்தரின் குரலை முழங்கி 
சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||
சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம் 
பொதுநலம் பேணி உழைத்திடுவோம்  |
விவேகானந்தரின் கொடியை ஏந்தி 
தியாகத்தின்  உருவாய் விளங்கிடுவோம் ||
முனிவர்கள் பரம்பரை நாம் என்போம் 
பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |
விவேகானந்தரின் படையாய்   விளங்கி
மங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||

Read Full Post »

எழுந்திடு, விழித்திடு ஓ பாரதமே!
நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்படு

சுயநலம் களைந்தே பொதுநலம் பேணியே
ஏழை மாந்தரின் துயரம் போக்கிடு

மானுடம்  உருவாக்கும் வாழ்க்கை  வளமாக்கும்
கல்வி வேள்வியை கற்க வந்திடு

சகலம் தெய்வீகம் சாஸ்திர சாரம்
அகத்தினில் தேடிடு, அமைதியை நாடிடு

வலிமையே வாழ்வு, பயமே தாழ்வு
விவேகானந்தரின் பாதையில் நடந்திடு

Read Full Post »

வீர நரேந்திரா விவேகானந்தா
சரணம் சரணம் குரு நாதா
ஜீவ சேவையே சிவ சேவையென
பாதை காட்டி அருள் புரிந்தாய்

பரமஹம்சரின் அருளை பெற்று
பாருலகெங்கும் பவனி வந்தாய்
அன்னை சாரதையின் அன்பைபெற்று அகிலம்
முழுதும் அணைத்துக் கொண்டாய்!!

இந்து மதத்தின் இணையற்ற பெருமையை
இவ்வுலகெங்கும் பரவச் செய்தாய்
இப்புவி மக்கள் நலமுடன் வாழ
இறை அருள் ஒன்றே வழி என்றாய்!!

மனதின் ஆற்றல் மலையினும் பெரிதென
மாந்தர்களை நீ உணரச் செய்தாய்
தூய்மையும் தொண்டும் இருகண்களேன
திக்கெட்டும் நீ முரசொலித்தாய்!!

வேதத்தின் உண்மை காலத்தில் ஈன்றாய்
வேதாந்த சிங்கமே விவேகானந்த
வேத ஸ்வரூப விவேகானந்தா
வீரேசுவர சிவ நமோ நமோ!!

Read Full Post »

மனதில் இருவேறு துருவங்களாய் நின்று இரு கேள்விகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

“குருவின் லட்சியமா?’ குடும்பத்தின் கடைத்தேற்றமா?”

ஒருபுறம் வாழ்வினைப் பூரனமாக்கும் குருவின் வழிகாட்டல் உறுதியாய் வந்து நின்றது; மறுபுறம் தந்தையை இழந்து வாடும் தாய்,சகோதரரின் வறுமை நிலை எதிரியாய் வந்து நின்றது.

ஒரு குடும்பம் உய்ய வாழ்க்கையை நடத்துவது அல்லது வாழ்வாங்கு வாழ்ந்த மகானின் உபதேசங்களால் உயரிய வாழ்க்கையை வாழ்வது.

எதை ஏற்பது? எதை கைவிடுவது ?

ஒரு குடும்பமா? இல்லை உலகமே குடும்பமா?

சிந்தனைகளின் சுழலில் சிக்கித் தவித்த மனம்… கண்களை மூடியபடியே தியானத்தில் மூழ்கினார்; காட்சிகள் விரிந்தன; கடமையும், களத்தின் அவசியமும் புரிந்தன .

வென்றது குருவின் அன்பு; விலகியது தனிமனிதனை சார்ந்த      சிந்தனை.

மேற்சொன்ன மனநிலை சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் சவாலான, நெருக்கடியான சமயத்தில் ஏற்பட்டது.

சொர்கத்தை விட மற்றவர்களுக்காக நரகத்திற்கும் செல்லத் துணிந்த விவேகானந்தர், தன் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் லட்சிய வடிவமாகவே வாழ்ந்தார்.

பாரத தேசத்தில் குருபக்தி புனிதமானது மட்டுமல்ல, என்றும் நமக்கு வழிகாட்டக் கூடியதாகவும் விளங்கும்.

Read Full Post »

பாரத பெருமையை விளக்கி
வேதாந்த ரகசியம் உணர்த்தி
தன்னம்பிக்கை கல்வி புகட்டி
இவ்வுலகிற்கு உயிராய் வந்தவன்

ஆண்மை வீரம் விதைத்து
மாதர் மதிப்பினை உரைத்து
மனத்தினில் சேவை நிறைத்து
நம் கண்ணிற்கு மணியாய் ஆனவன்.

சோம்பல் கேடினை ஒழித்து
சமத்துவ ஞானம் அளித்து
சமரச சமயம் வளர்த்து
பரதேசத்தை சஈடராய்ப் பெற்றவன்.

Read Full Post »

வீர தளபதி விவேகானந்தர்
வா வாவென்று அழைக்கிறார்!
அவர் குரலைக் கேட்டு அடிப்பணிந்து
வீரப்படையே விரைந்து வாரீர்!

தியாகம் தொண்டு விரதம் பூண்டு,
ஆசை அரக்கனை அழிக்க வாரீர்!
சுயநல நஞ்சை, தடுத்து மாய்த்திட
விவேக அமுதம் பருக வாரீர்!

தேவனே வா, கருணைக் கடலே!
எனது உடல்-பொருள் உனது அன்றோ!
உந்தன் பணியில் எந்தன் வாழ்வை
அர்ப்பணிக்கவே வரம் அருள்வாய்.

Read Full Post »

ஆனந்தம் ஆனந்தம் விவேகானந்தம்
வேதாந்த கேசரியே விவேகானந்தா
அருள் அமுதாய் வந்த ஆன்மீக ஜோதியே
அரும் பெரும் துறவியே அறிவு
நிறை வள்ளலே

மலைபோல அவர் தந்தார் நம்பிக்கை – மக்கள்
உள்ளத்தில் விதைத்தாரே தன்னம்பிக்கை
மடமையை நீக்கவும்
கடமையை உணர்த்தவும்
மனித நேயம் மலர்ந்திடவே
நாடெல்லாம் வலம் வந்தார்

இசை பாடி குருதன்னை துதித்தார் – மக்கள்
நலமான செயல் செய்ய அறிவூட்டி நின்றார்
அமெரிக்க நாட்டிலே
அகிலமெல்லாம் போற்றவே
தாய் நாட்டின் பெருமைதனை
தழைத்தோங்க செய்தவர்

நிலையான பெருவாழ்வு நாட்டியே – உலகில்
குருதேவர் வாழ்வுக்கு வழிகாட்டி நின்றார்
பாரெல்லாம் ஒன்றாக்க
வளத்தோடும் நலத்தோடும்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வழிகாட்டிச் சென்றாரே

Read Full Post »

விவேகானந்தா ஸ்ரீ விவேகானந்தா

விவேகானந்தா ஸ்ரீ விவேகானந்தா

விவேகராஜா விவேகானந்தா


சங்கரன் உருவில் அவதரித்தீர்

சமதர்மம் உலகில் நாட்டவந்தீர்

எளியேன் மனதில் குடிபுகுந்தீர்

எந்நாளும் உம்மை நாங்கள் மறவோமே


ஆன்மீக தீபத்தை ஏற்றி வைத்தீர்

அகிலத்தை அதிலே ஒளிரச் செய்தீர்

அனைவரும் காண வழி வகுத்தீர்

அண்ணலே உந்தன் வழி நடப்போம்

Read Full Post »

சிம்ஹநாதம் கேட்குது
அண்டமெல்லாம் அதிருது
பங்கஜமலர் கண்ணன் எங்கள்
சுவாமி விவேகானந்தரின்

சிம்ஹநாதம் கேட்குது

மங்களங்கள் பொங்குது
மறைகள் எங்கும் முழங்குது
மடமை அச்சம் நீங்குது
மனிதநேயம் ஒங்குது

சிம்ஹநாதம் கேட்குது

மாதர் சக்தி மலருது
நீதி நெறிகள் நிலைக்குது
சாதி வெறிகள் சரியிது
வீதி வீதியாக எங்கும்

சிம்ஹநாதம் கேட்குது

உறங்கி கிடந்த உயிர்களை
உலுப்பி எழுப்பும் நாதமாம்
உலக மாந்தர் உயரவே
உயிரை ஈத்த உத்தமரின்

சிம்ஹநாதம் கேட்குது

 

Read Full Post »

Older Posts »