Feeds:
Posts
Comments

Posts Tagged ‘swamiji’

சர்வ சமயப் பேரவையில்

சர்வ சமயப் பேரவையில்:

சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். எனவே சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலை இந்திய நாட்டின் சன்னியாசிகளைப் போல் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார். அவரை மக்கள் எகத்தாளமாக நடத்தினர். மேலை நாடுகளில் பிச்சை எடுப்பது குற்றம் எனக் கூறினார்கள். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது எதிர் வீட்டின் கதவு திறக்கப்பட்ட்து. ஒரு பெண்மனி வெளியே வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

1233560_590718274319052_45925771_n

சர்வ சமயப் பேரவை— செப்டம்பர் 1893:

1893ம் வருடம், செப்டம்பர் 11ம் நாள் திங்கள் கிழமை சர்வ சமயப் பேரவைக் கூடியது. அந்தக் குழுத்தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000 பேர்களைப் பார்த்தும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் “அமெரிக்க சகோதரி சகோதரர்களே” எனக் கூறி தன் உரையைத் துவங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து 2 நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் 7000 பேர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி எற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார். இந்த பேரவையில் இந்து மதத்தர்மத்தின்படி அனைத்து மதங்களும் உண்மையே, அனைத்து மதங்களையும் நாம் எற்றுக் கொள்ள வேண்டும் என்று முழுங்கினார். சுவாமிஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளி வந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது.

Read Full Post »

நரேனின் பிரார்த்தனை

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. ‘நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

Narenin Pirathanani

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். ‘நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்’ என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் ‘அன்னை என்ன சொன்னாள்?’ என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

‘ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்’ என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்’ என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் ‘நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது’ என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் …..

Read Full Post »

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013)

சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின  விழாவை முன்னிட்டு விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் 02/02/2013 அன்று தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் “சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி ” அமைக்கப்பட்டது .

001

கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் விதமாக படங்கள் வைக்கபட்டு இருந்தன. இதன் ஒரு பகுதியாக ஊக்கமூட்டும் வீடியோப் படங்கள் காண்பிக்கப்பட்டன. இந்த வீடியோ படங்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. கண்காட்சியில் புத்தக விற்பனையும் நடைப்பெற்றது.

002

கண்காட்சியில் 7 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 500 க்கு  மேற்பட்ட மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர். 80 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில் வீடியோ படம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினர் . கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்தியை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இக்கேள்விகள் சரியான பதில் எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு “விவேகானந்தர் அழைக்கிறார்” புத்தகமும் “மாணவனே மனதை ஒருமுகப்படுத்து ” என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

005

கண்காட்சியின் நிறைவு விழாவில் சுவாமி ஆத்ம கனானத்தர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். “மனிதா நீ மகத்தானவன் ” என்ற பாடலை பாடி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் தெரியாது என்று பதில் கூறினர். சரி காந்தியை பற்றி தெரியுமா என்று கேட்டார்.ஆம் தெரியும் என்று மாணவர்கள் அனைவரும் கூறினர். காந்தியை பற்றி தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியவில்லை என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் அமைதியாய் இருந்தனர். அதில் ஒரு புத்திசாலி மாணவி எழுந்து காந்தி தாத்தா நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டர் என் தாத்தா என்ன செய்தார் நான் ஏன் அவரை நினைவில் வைக்க வேண்டும் என்றார். அது போல நாம் வாழும் இந்த பூமியில் நாம் வாழ்ந்தற்குகான ஏதேனும் சான்றை விட்டுச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

008

தலைமையாசிரியர்  பேசும் போது இப்படி ஒரு வாய்ப்பு நமது பள்ளிக்கு கிடைத்தது  ஒரு பாக்கியம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவ , மாணவி அனைவரும் அவரது வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

009

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி பரிசுகள் வழங்கினார் மற்றும்  பள்ளிக்கு விவேகானந்தர் இளைஜர் மன்றம் சார்பில் நினைவுபரிசும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

011

Read Full Post »

Image

Image

Image

Read Full Post »

Naren School

6789

தொடரும் ……

Read Full Post »

சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..

                      ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.
Close Path
இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) அவசியம்.

Read Full Post »

சிறுவயதில் விவேகானந்தர்

 

தொடரும் …..

Read Full Post »

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
சீடர்: ‘சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?”
சுவாமி விவேகானந்தர் “உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் “சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா’- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது’ என்று கூறுகிறார்.
அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.
மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், ‘அறிபவனை எதனால் அறிவது?’ என்று கேட்கின்றன.
உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. ‘உணரப்படுகிறது’ என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.
மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!
–சுவாமி விவேகானந்தா …

Read Full Post »

நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

தன்னுடைய சொற்பொழிவுகளாலும் கருத்துக்களாலும் உலகெங்கும் புகழ் பெறும் முன் சுவாமி விவேகானந்தர் ஒரு திருவோடு ஏந்திய துறவியாக இந்தியா முழுவதும் சுற்றினார். இன்றைய ராஜஸ்தான் பகுதியில் அவர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம்.

ஆல்வார் நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங் ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை, செயல் அனைத்திலும் ஆங்கிலேய பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது பிடிக்கவில்லை. மன்னர் சுவாமிஜியைச் சந்தித்தால் நல்லது என்று எண்ணினார் திவான். எனவே அவருக்கு, ‘ஆங்கிலத்தில் அபார அறிவு கொண்ட ஒரு பெரிய சாது இங்கே உள்ளார்’ என்று எழுதினார். மன்னர் மறுநாளே திவானின் வீட்டிற்கு வந்து சுவாமிஜியைச் சந்தித்தார்.

 மன்னர் வந்து சுவாமிஜியை வணங்கி அமர்ந்து பேச்சைத் தொடங்கினார்.

 மன்னர்: ‘சுவாமிஜி, நீங்கள் மிகவும் படித்தவர் என்று கேள்விப்பட்டேன். உங்கள் படிப்பிற்கு நீங்கள் கை நிறைய சம்பாதிக்கலாமே! ஏன் இப்படி பிச்சையெடுத்துத் திரிகிறீர்கள்?’

 சுவாமிஜி: ‘மகாராஜா, நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன, அவற்றை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேட்டை அது இதென்று ஆங்கிலேயர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?’

 சிறிதும் தயக்கமின்றி வந்த சுவாமிஜியின் கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மன்னர் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

 மன்னர்: ‘ஏன் என்பதற்கு குறிப்பாக எந்த காரணத்தையும் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.’

சுவாமிஜி:  ‘அதுபோல்தான்; எனக்கு இது பிடித்திருக்கிறது. நான் பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறேன்.’

 சிறிது நேரத்திற்குப் பிறகு மன்னர், ‘சுவாமிஜி எனக்கு உருவ வழிபாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் கதி என்னவாகும்?’ என்று கேட்டார். இதைக் கேட்கும்போது அவர் சற்று சிரித்த முகத்துடன் கேலி செய்வது போன்ற தொனியில் கேட்டார். அவர் கேட்டவிதம் சுவாமிஜிக்கு எரிச்சலை மூட்டியது.

 சுவாமிஜி: ‘நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.’

 மன்னர்: ‘இல்லை சுவாமிஜி, எல்லோரையும் போல், ஏனோ என்னால் இந்த மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் வழிபட முடியவில்லை. மறு உலகத்தில் துன்பப்படுவதுதான் என் தலை விதியா?’

 சுவாமிஜி: ‘நல்லது, ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ வேண்டும். அதுதான் நல்லது’

 இந்தப் பதிலை அங்கிருந்தயாரும் எதிர்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவர். அவர் மன்னருக்கு தகுந்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக் கூறிவிட்டு அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக் கொண்டுவருமாறு கூறினார்.

 சுவாமிஜி: ‘இந்தப் படத்தில் இருப்பது யார்?’

 திவான்: ‘அது மன்னரின் படம்.’

 சுவாமிஜி திவானிடம் அடுத்ததாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியால் உறைய வைத்தது.

 சுவாமிஜி: ‘திவான்ஜி, இந்தப் படத்தின்மீது துப்புங்கள்.’

 அனைவரும் அதிர்ச்சியில் அசைவற்று நின்றனர். சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ‘துப்புங்கள் திவான்!’ என்று மீண்டும் திவானிடம் கூறினார். திவான் அசையவில்லை. உடனே சுவாமிஜி அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து, ‘திவான் இல்லாவிட்டால் இங்கே இருக்கின்ற வேறு யாராவது ஒருவர் முன்வாருங்கள். இந்தப் படத்தில் அப்படி என்ன தான் உள்ளது? வெறும் காகிதம் தானே! இதன் மீது துப்புவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்.

 அங்கிருந்த மற்றவர்களும் சுவாமிஜி கூறியதைச் செய்ய முன்வரவில்லை. அனைவரும் சுவாமிஜியையும் மன்னரையும் மாறி மாறி பார்த்தபடி திகைத்து நின்றனர். அப்போது சுவாமிஜி மீண்டும் திவானிடம், ‘என்ன, அப்படியே நிற்கிறீர்களே! இந்தப் படத்தின் மீது துப்புங்கள்’ என்று அழுத்தமாகக் கூறினார். அதன் பிறகும் திவானால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; பதைபதைத்தவாறே நடுங்கிய குரலில்,

 திவான்: ‘சுவாமிஜி, என்ன சொல்கிறீர்கள்? சொல்வதைப் புரிந்து கொண்டு தானா சொல்கிறீர்கள்? இது மன்னரின் படம். இதன் மீது என்னால் எப்படி துப்ப முடியும்?’ என்று கேட்டார்.

 சுவாமிஜி: ‘இருக்கட்டுமே! மன்னரின் படம் தானே, மன்னர் அல்லவே! இந்தப் படத்தில் மன்னர் உயிருணர்வுடன் இல்லையே! இது வெறும் காகிதத் துண்டு. மன்னரின் எலும்போ சதையோ ரத்தமோ இதில் இல்லை, இது பேசுவதில்லை, நடப்பதில்லை, மன்னர் செய்வது போல் எதையும் செய்வதில்லை. இருந்தாலும் இதன் மீது துப்ப நீங்கள் யாரும் முன்வர மறுக்கிறீர்கள். ஏன்? ஏனெனில் இந்தப் படத்தில் மன்னரின் பிரதிபிம்பத்தை நீங்கள் காண்கிறீர்கள். இதன் மீது துப்பினால் மன்னரையே அவமதிப்பதாக உணர்கிறீர்கள்.’

 இதனைக் கூறிவிட்டு சுவாமிஜி மன்னரைப் பார்த்து தமது பேச்சைத் தொடர்ந்தார்: ‘பாருங்கள் மகாராஜா! இந்தப் படம் நீங்கள் அல்ல. ஆனால் ஒரு விதத்தில் இது நீங்களே. அதனால் தான் இதன் மீது துப்புமாறு சொன்னபோது உங்களிடம் பக்தி கொண்ட உங்கள் சேவகர்கள் மறுத்துவிட்டார்கள். இது உங்கள் பிரதிபிம்பம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்களே அவர்களின் நினைவிற்கு வருகிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு கொடுக்கின்ற மரியாதையை அவர்கள் இந்தப் படத்திற்குக் கொடுக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் செய்யப்பட்ட தெய்வ வடிவங்களை வழிபடுகின்ற பக்தர்களின் விஷயமும் இது தான். அவர்கள் வழிபடுகின்ற உருவம் அவர்களுக்கு அந்தப் பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. எத்தனையோ இடங்களில் நான் யாத்திரை செய்துள்ளேன். எந்த இந்துவும், “ஏ கல்லே, உன்னை வணங்குகிறேன். ஓ மண்ணே , எனக்கு அருள் செய்” என்று வழிபடுவதை நான் காணவில்லை. மகாராஜா! எங்கும் நிறைந்த, பேரானந்த வடிவான முழுமுதற் கடவுளையே ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். கடவுளும் அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அருள் புரிகிறார்.’

Read Full Post »

பாரதமே உயிர்த்தெழு

               உங்கள் நாட்டிலுள்ள மூலப் பொருட்களை பயன் படுத்தி அயல் நாட்டினர் பணமாக குவிக்கிறார்கள். நீங்களோ பொதி சுமக்கின்ற கழுதைகளைப் போல் அவர்களின் மூட்டைகளை சுமக்கிறீர்கள். இந்தியாவின் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து , தாங்கள் அறிவை பயன் படுத்தி பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். நீங்களோ உங்கள் புத்தியை பூட்டி வைத்து விட்டு , உங்கள் சொத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு , சோறு சோறு என்று பரிதாபமாக அலைகிறீர்கள்!..

     

              சோம்பலும் கயமையும் வஞ்சகமும் இந்த நாட்டையே மூடிக் கொண்டிருகின்றன. அறிவுள்ள ஒருவன் இவற்றை எல்லாம் பார்த்துகொண்டு அமைதியாக இருக்க முடியுமா ? அவன் கண்களில் நீர் பெருகாதா ? சென்னை . மும்பை . பஞ்சாப் , வங்காளம் என்று எங்கே பார்த்தாலும் வாழ்க்கைத் துடிப்பு இருப்பதற்கு அடையாளத்தை என்னால் காண முடியவில்லை. படித்தவர்கள் என்று உங்களை நினைத்து கொண்டிஇருக்கிரர்கள்! என்ன மண்ணாங்கட்டியைப் படித்து விட்டிர்கள் ? மற்றவர்களின் கருத்துகளை திருப்பிச் சொல்லக் கற்றிருக்கீர்கள்! அயல்மொழியில் படித்து , மனப்பாடம் செய்து உங்கள் மூளையை நிரப்பி கொண்டு .சில பட்டங்களை வாங்கிக் கொண்டிஇருக்கிரர்கள்! சீ, சீ இதுவா படிப்பு ? உங்கள் படிப்பு பின் லட்சியம் என்ன ? ஒரு குமாஸ்தா வேலை அல்லது ஒரு கேடு கெட்ட வக்கீல் , அதிகம் போனால் குமாஸ்தா வேலையின் பரிணாமமான ஒரு துணை நீதிபதி – இதுதானா!..

                    ஒரு முறை கண்களை திறந்து பார் . பொன் விளையும் பூமியான இந்த பாரத திரு நாட்டில் ஒருபிடி உணவிற்காக மக்கள் அல்லாடும் பரிதாபமான நிலை பார் . உங்கள் படிப்பால் இந்த பரிதாப குரல்களின் தேவை நிறைவேறுமா ? ஒரு போதும் நிறைவேறாது. மேலை விஞ்ஞானத்தின் உதவியோடு பூமியை நன்றாக உழுது , உணவு பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் ஒருவனின் கீழ் கைகட்டி வேலை பார்த்தல்ல , உங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை கண்டுபிடிப்பதன் முலம் இதைச் செய்ய்ங்கள். இப்படி தங்களுக்கு வேண்டிய உணவையும் தாங்களே ஈட்டிக் கொள்வதற்காகத்தான் அவர்கள் ரஜோ குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் போதிக்கிறேன்..

இளமையிலிருந்து  நாம் பெறுவது எதிர்மரையனா கல்வி. நாம் உதவாக்கரைகள் என்றே நாம் கற்று வருகிறோம் . நமது நாட்டில் பெரிய மனிதர்கள் எல்லாம் பிறந்தார்கள் என்பது நமக்கு தெரியாது. உடன்பாட்டு முறையிலான கல்வி எதையும் பெற வில்லை . கைகளையும் கால்களையும் எப்படி பயன் படுத்துவது குட நமக்குத் தெரியாது . ஆங்கிலயேர்களின் ஏழு தலைமுறை முன்னோர்கள்   ஒன்று விடாமால் படித்தோம் ; ஆனால் நமது முன்னோர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது; பலவினத்தை கற்று கொண்டோம்  . வெல்லப்பட்ட இனமான நாம் பலவினர்கள் , சுததிரமாக ஏதும் செய்யா முடியாதவர்கள் என்று கற்று கொண்டோம். இந்த நிலையில் சிரத்தை எப்படி போகுமால் இருக்கும் ? சிரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் ; தனம்பிக்கை மறுமலர்ச்சி   பெற வேண்டும் . அப்போது நமது நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தாமாக படிப்படியாக தீர்ந்து போகும்.

பிச்சைக்காரனின் குறை ஒரு நாளும் தீராது, நீங்கள் கேட்பதை எல்லாம் அரசாங்கம் தந்து விடுவதாக வைத்து கொள்ளவோம். பெற்ற அவற்றை பேணி காக்க மனிதர்கள் எங்க இருகிறார்கள் ? எனவே முதலில் மனிதர்களை உருவாக்குங்கள் . மனிதர்களே வேண்டும் . சிரத்தை இல்லாமால் மனிதன் எப்படி உருவாக  முடியும் .

உடன்பாட்டுக் கருத்தக்களை மட்டுமே மக்களுக்கு நாம் தர வேண்டும் . எதிர் மறையான கருத்துகள் மனிதனை பலவீனம் படுத்தும் . எங்கே பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் பிள்ளைகளை படிக்குமாறு வற்புறுத்தி கொண்டுயருகிரார்கள் ,  இவர்களால் எந்த பயனும் இல்லை ,முட்டாள்கள் , மடையர்கள் என்று திட்டி கொண்டு இருகிறார்கள் அந்த பிள்ளைகள் பின்னல் அது போலவே ஆகி விடுகிறார்கள் …

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ,விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக்காலில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்வி தான் நமக்குத் தேவை. மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி. அறிவு வளர்ச்சிக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் மனதை ஒருமுகப்படுத்துதல். கல்வியின் இலட்சியமே மனதை ஒருமுப்படுத்துவதுதான்.“

கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

Read Full Post »