Feeds:
Posts
Comments

Archive for January, 2014

ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….

ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட, அதே வேளையில்  இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு  வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் மதப்பிரிவுகள் அனைத்தையும் சமரசபடுத்தி அறிவுக்கும் உணர்ச்சிக்கும் சம  இடம் கொடுக்கின்ற, உலகம் தழுவிய மதம் ஒன்றை உருவாக்குவதற்குரிய சிந்தனை வளம் மிக்க ஒருவர் பிறப்பதற்கு உரிய காலம் வந்தது.

thakur-singing

அத்தகைய மனிதர் பிறந்தார். அவரது திருவடிகளின் கீழ் பல ஆண்டுகள் அமர்வதற்கான பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒருவர் பிறப்பதற்கான தேவை ஏற்பட்டது. காலமும் கனிந்தது, அவர் பிறந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எந்த நகரம் மேலை நாட்டுச் சிந்தனைகளால் நிறைந்திருந்ததோ, எந்த நகரம் மேலை நாட்டுக் கருத்துக்களின் பின்னால் பைத்தியமாக ஓடிக் கொண்டிருந்ததோ, எந்த நகரம் இந்தியாவிலுள்ள மற்றெல்லா நகரங்களையும் விட ஐரோப்பியமயமாகி விட்டிருந்ததோ அந்த நகருக்கு அருகிலேயே ஓரிடத்தில் அவரது வாழ்க்கைப் பணியெல்லாம் நடைபெற்றது. அவருக்கு நூலறிவு எதுவும் இல்லை. இந்த மாபெரும் அறிஞருக்குத் தமது சொந்தப் பெயரைக்கூட எழுதத் தெரியாது. ஆனால் கல்வி மிக்க நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அவரிடம் அறிவுக் களஞ்சியத்தையே கண்டனர். இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விசித்திரமான மனிதர்.

அவர் இந்திய ரிஷிகளின் நிறைவாகத் திகழ்ந்தார். தற்காலத்திற்குரிய ரிஷி அவர், அவரது உபதேசங்களே இந்தக் காலத்திற்கு மிகவும் பயன் தருபவை என்பதை மட்டும் இப்போது கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்குப் பின்னணியில் செயல்பட்டது தெய்வீக ஆற்றல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு தெரியாத, யாரும் கேள்விப்படாத ஒரு குக்கிராமத்தில் ஏழை அர்ச்சகராக பிறந்த அவர் இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கான மக்களால் வழிபடப்படுகிறார். நாளை பல்லாயிரக் கணக்கான நபர்களால் வழிபடபடுவார். நேரம் கிடைத்து வாய்ப்பும் கிடைக்குமானால் அவரைப் பற்றி மேலும் பேசுவேன். ஆனால் இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: உங்களிடம் நான் உண்மையான எதாவது ஒரு வார்த்தை பேசி இருந்தேனானால், அது அவருடையது, அவருடையது மட்டுமே; உண்மையில்லாத, தவறான, மனித இனத்திற்கு நன்மையைத் தராத எதையாவது நான் பேசியிருந்தால், அவையெல்லாம் என்னுடையவை, அதற்கு பொறுப்பாளி நானே.

*************************************

Read Full Post »

சுவாமி விவேகானந்தர் ரதயாத்திரை விழா

சுவாமிவிவேகானந்தரின் 150வது பிறந்தஆண்டு விழாவானது பல்வேறு மக்களால் பல்வேறு விதமாகமிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தரின்  150வது ஆண்டு விழா குழுவும் இனைந்து சென்னை வண்ணாரப்பேட்டை  மற்றும் கொருக்குப்பேட்டை பகுதிகளில் சுவாமிவிவேகானந்தரின் பிறந்தநாளான 12-01-2014 ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் ரதயாத்திரை ஏற்பாடுசெய்யப்பட்டது.

1

சுவாமிவிவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளை மக்களிடையே பரப்பி குறிப்பாக இளைஞர்களிடையே பெறும் எழுச்சியை உண்டாக்குவதே இந்த ரதயாத்திரையின் நோக்கமாகும். ரதயாத்திரையானது 12-01-2014 ஞாயிற்றுகிழமைஅன்றுகாலை 9.00 மணியாளவில் வண்ணரப்பேட்டையில் உள்ள சர்தியாகராயர் கல்லுரி அருகில் ஆரதி மற்றும் புஷ்பாஞ்சலியுடன் ரதஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமிவிவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய பேனர் மற்றும் தட்டிகளை ஏந்தியபடி மிகுந்த உற்ச்சாகத்துடன் கோஷமிட்டுக்கொண்டே தொண்டர்கள் முன்னேசெல்ல, சுவாமிவிவேகானந்தரின் கம்பீரமான திருஉருவச் சிலையுடன் ரதமானது பின்னே சென்றது.

2

ரதம் சென்ற இடமெல்லாம் மக்கள் ஆரதி எடுத்து புஷ்பாஞ்சலி செய்து அமோக வரவேற்ப்பு கொடுத்தனர். சுவாமிவிவேகானந்தரின் படம், சிந்தனைதுளிகள், சுவாமிவிவேகானந்தரின் வாழும் செய்தியும்அடங்கியதுண்டு பிரசுரம், மற்றும் பொன்மொழிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இந்தரதயாத்திரையில் பங்கேற்றனர்.

ரதயாத்திரையின் இறுதிநிகழ்ச்சியாக கொருக்குபேட்டை H4 காவல்நிலையம் அருகில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. ரதமானது H4 காவல்நிலையம்அருகில்வந்ததும், முதலில் ஆரதி செய்யப்பட்டு பிண்பு வரவேற்புரைஅளிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டன. சுவாமிவிவேகானந்தரை போல் வேடமிட்ட  சிறுவன் அனைவரது கவனத்தையும்கவர்ந்தான்.

3

உயர்திரு பழனிவேல்ஜி அவர்கள் தலைமையுரையாற்றினார் அவர் இளைஞர்கள்அனைவரும் சுவாமி விவேகானந்தரை முன்னுதாரனமாக வைத்துபின்பற்ற வேண்டும் என்று கூறினார். அவரைதொடர்ந்து உயர்திரு துறைசங்கர்ஜி அவர்கள் சிறப்புரையாற்றினர். அவர் இந்த உலகத்தின் புண்ணிய பூமி பாரததேசம் என்றுரைத்தவர் சுவாமிவிவேகானந்தர். பாரததேசத்தின் அதிவேக முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டவர் சுவாமிஜி. சுவாமிஜியின் உலகசகோதரத்துவதத்துவம் அனைத்துலக மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் பாரதத்தின் மீது கொண்டிருந்த தேசபக்தி அளவிட முடியாதது. அவர்விரும்பிய பயன்பாட்டுகல்விமுறையை மக்கள் வணங்கி ஏற்றுக்கொண்டனர். பாரததேசத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமிஜி என்று எழுச்சி மிகுந்த சொற்பொழிவாற்றினார். பிண்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டு நன்றியுரை வழங்கப்பட்டது. இறுதியாக பொதுகூட்டதில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாஇனிதேநிறைவுற்றது.

*****************************************

Read Full Post »