Feeds:
Posts
Comments

Archive for December, 2013

பாரதத்தின் மைந்தர்கள்….

 

நமது பாரத அன்னை நல்ல பல புதல்வர்களை ஈன்று இந்த உலகம் உய்வதற்கு வழிகாட்டும் உத்தமி. அம் மதலைகள் நமக்கு மூதாதையர்களாக விளங்கித் தவம், ஒழுக்கம், திறமை, கலை, தியாகம் எனப் பல வகைகளில் முன்னோடிகளாக விளங்குகின்றனர். அவர்களைத் தெய்வமாக போற்ற வேண்டியது நமது கடமையாகும். அவர்களுள் சிலரை அறிந்து கொள்வோம்.

துருவம்: இறைவனிடம் அசையாத நம்பிக்கை வைத்து மிகப்பயங்கரமான காட்டில் அன்ன ஆகாரமின்றி ஒற்றைக் காலில் தவம் செய்து கடவுளைக் கண்ட ஏழு வயது சிறுவன். இப்போது வானில் வடதுருவத்தில் துருவ  நட்சத்திரமாக மின்னி நமக்கு வழிகாட்டிக் கொண்டுள்ளார்.

திருஞானசம்பந்தர்: மூன்று வயதிலேயே தேவாரம்பாடி சிவபெருமானை குளிர்வித்தவர். பக்திக் குழந்தைகளில் முதன்மையானவர்.

நம்மாழ்வார்: பிறந்த நாள் முதலே அன்னபானம் எதுவும் இன்றி, மெளனியாகவே வளர்ந்த திருமாலடியார் ஆவார். ஐந்து வயதிலிருந்தே இறைவன்மீது திருவாய்மொழி மலர்ந்து பாடல்கள் பாடியவர். வேதம் தமிழ் செய்த மாறன் என்ற பெருமை உடையவர். சடகோபர் என்ற திருநாமும் இவருக்கு உண்டு.

நசிகேதன்: தன் தந்தையின் சொற்படி யமதர்மனுக்குத் தானமாக தானே வலிய  சென்றவர். அவரைக் குருவாகக் கொண்டு கடோபநிஷதம் நமக்குத் தந்த தெய்வீக சிறுவன் இவர்.

சிரவணகுமார்: கண் பார்வையற்ற தனது பெற்றோரைத் தோளில் காவடியாக தூக்கி கொண்டு தீர்த்தயாத்திரை செய்வித்தவர்.

எத்தனை மகான்கள் இந்த ஞான பூமியிலே அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கம்.

Read Full Post »

பாரதம் பெயர் காரணம்

 

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக தாம் பிறந்து வாழ்ந்த பூமியைத் தாய்நாடு என்று சிறப்பித்துப் பாராட்டி, உறவு கொண்டாடிய உலகின் முதல் சமுதாயம் ஹிந்து சமுதாயமே. பூமி நமது தாய், நாம் பூமித்தாயின் புதல்வர்கள் என்ற மனோபாவம் இருப்பதால் தான் நாம் வாழும் நாடு நமது தாய்நாடு என்ற எண்ணம் நமக்கு உதித்தது.

நமது தேசத்தின் வடக்கில் ஹிமாலயமும் தெற்கில் பாரத அன்னையின் பாதங்களைப் பணியும் ஹிந்து மகாசாகரமும், கிழக்கில் கங்கை நதி கடலோடு கலக்கும் கங்கா சாகரமும் (வங்காள விரிகுடா) மேற்கே சிந்து நதி கடலில் கலக்கும் சிந்து சாகரமும் (அரபிக் கடல்) எல்லைகளாக அமைந்துள்ளன.

198241_122277824597525_1344583902_n

ஆன்மீக செல்வத்தின் உறைவிடமாய் பாரதம் திகழ்ந்தாலேயே இந்த நாட்டிற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது. பா – என்ற சமஸ்கிருதச் சொல்லிற்குச் “ஒளி” என்று பொருள் உண்டு. இதனாலேயே உலக இருளை அகற்றும் ஆதவனை பாஸ்கரன் என்று கூறுகிறோம். ஞாயிறு என்பதனை ‘பாநு’ என்று குறிக்கின்றோம். “ரத” என்ற சொல்லிற்கு ‘முழ்கியிருத்தல் — திளைத்திருத்தல்’ என்ற பொருள் உண்டு. எனவே “ஞானத்தில் திளைத்திருந்த பூமி” இதுவாகையால் இதற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது.

வேதமுடையதிந்த நாடு, நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு,
தேசமில்லா ஹிந்துஸ்தானம் — இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
—மகாகவி பாரதி…..

Read Full Post »