Feeds:
Posts
Comments

Posts Tagged ‘பகவத் கீதை’

வர்ணம்

ர்மம்தான் நான்கு வர்ண அமைப்புகளாக பிரித்து ஒழுங்குமுறைப்படுத்தப் பட்டுள்ளது. எல்லோரும்தான் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். ஆனால்,ஒரு சிலரே, உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்களோ, ஆரம்ப நிலையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் கூட பத்து நிமிடம் கூட அவர்களால் தாங்கள் நினைத்தபடி, மனதை ஒருமுகப்படுத்த முடிவதில்லை. அத்தகைய குறைந்த அளவு சாதனை அறிவுடைய சாதகர் சூத்திர சாதனைப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தன்னுடைய சுபாவத்தில் இருந்து தோன்றிய கர்மத்திறனுக்கு ஏற்ப, சேவை புரிவதில் இருந்தே தன்னுடைய கர்மத்தைத் தொடங்க வேண்டும். படிப்படியாக வைசியர், சத்திரியர், மற்றும் பிராம்மணப் பிரிவுகளில் அடையப்படுகின்ற உயர் கர்மத் திறன் அவருடைய சுபாவத்தில் பெருகிக் கொண்டே செல்லும். அவர் தனது பாதையில் உயர்ந்து கொண்டே செல்வார். மிகவும் உயர்வானது என்று கருதப்படுகின்ற பிராம்மண சாதனைப் பிரிவும்கூட தன்னில் குறைவுடையதுதான். ஏனெனில், இந்த நிலையிலும் கூட அந்த பிரம்மம் என்னவோ இன்னும் அடையப்படாத நிலையில் தனித்தே இருக்கிறது. பிரம்மத்தில் நுழைவு பெற்றுவிட்டால், அந்த பிராம்மணப் பிரிவு என்பதும் கூட இல்லாமல் போய்விடுகிறது.

“வர்ணம்” என்றால் “தோற்றம்” என்று பொருள். இந்த உடல் உங்களுடைய உணமையான தோற்றம் அல்ல. உங்களுடைய அக எண்ணவோட்டம் எதுவோ, அதுவே உங்களுடைய உண்மையான தோற்றம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “அர்ஜுனா! மனிதன் நம்பிக்கைமயமானவன். எனவேதான் அவனுக்கு எதிலாவது நம்பிக்கை அவசியம் இருக்கவே செய்கிறது. அவனுடைய நம்பிக்கை எவ்விதமோ, அவ்விதமே அவனும் இருக்கிறான். எண்ணம் எவ்வாறோ, அவ்வாறே மனிதன்”.

Varnam

வர்ணம் என்பது கர்மத்திறனை மதிப்பிடுகின்ற அக அளவியல் குறீயிடு ஆகும். ஆனால், மக்கள் அனைவரும் இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தை விட்டுவிட்டு, வெளியில் உள்ள சமுதாயத்தில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, சாதிகளை உருவாகிக் கொண்டு, அவற்றையே ‘வர்ண அமைப்பு’ அல்லது ‘சாதி அமைப்பு’ என்று ஏற்றுக் கொள்வதுடன் நிற்காமல் அவற்றிற்கான சட்டதிட்டங்கள். ஒழுங்குமுறைகள் என்று எதை எல்லாமோ உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவை அனைத்தும் வெறும் சமுதாய அமைப்புகளே தவிர, வேறொன்றுமில்லை. அவர்கள் கர்மத்தின் உள்ளது உள்ளபடியான யதார்த்த உருவத்தைத் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வளைத்தும் முறுக்கியும் மாற்றி மாற்றி அமைத்தும் கொள்கின்றனர். அதன்மூலம், அவர்களுக்குக் கிடைக்கின்ற போலித்தனமான சமுதாய மரியாதை மற்றும் சலுகைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தற்காத்து கொள்கின்றனர். காலப்போக்கில் வர்ணத்தை நிச்சியம் செய்வது பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்துவிட்டது. ஆனால், உண்மையில் அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணர், “நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்” என்கிறார். அப்படியென்றால் இந்த பாரத தேசத்திற்கு வெளியில் படைப்பு என்ற பெயரில் ஒன்றுமே இல்லையா என்ன? ஆனால் அங்கெல்லாம் இந்த தேசத்தில் காணபடுவதைப் போன்று, “சாதிகள்” என்ற பெயரில் எந்த அமைப்புமுறையும் இல்லையே ஏன்? இந்த பாரத தேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான சாதிகள் மற்றும் அதற்குள் அடங்கிய கிளை சாதிகள் என்றொரு நிலை இருக்கிறதே! ஸ்ரீ கிருஷ்ணர் சாதியின் பெயரால் மனிதர்களை எல்லாம் பிரித்தாளும் வேளையில் ஈடுபட்டிருந்தாரா? இல்லை இல்லவே இல்லை. “குணகர்ம விபாகச”:– குணத்தை அடிப்படையாக கொண்டு, இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தையே நான்கு சாதனை பிரிவுகளில் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளேன்” என்கிறார் அவர்.

“கர்மாணி ப்ரவி பக்தானி”:- “கர்மமே பிரிக்கப்பட்டு உள்ளது.” கர்மம் என்றால் என்ன? என்பது புரிந்துவிட்டால், “வர்ணம் என்றால் என்ன?” என்பது புரிந்துவிடும். “வர்ணம் புரிந்துவிட்டால், வர்ணக் கலப்பு எனபதையும் உள்ளது உள்ளவாரே புரிந்து கொண்டு விடுவீர்கள்.

வர்ணக் கலப்பு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் …….

Read Full Post »

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?

                அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன். அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார் ? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும்கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.

அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான்.  ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

 ************

Read Full Post »

 

  • பகவத் கீதை மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25ம் அத்தியாயம் தொடக்கமாக 42ம் அத்தியாயம் முடிய பதினெட்டு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது.
  • கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள் உள்ளன. இவற்றில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்கள், அர்ஜுனன் பேசுவது 57, சஞ்சயன் பேசுவது 67, ஒரே ஒரு ஸ்லோகம் திருதராஷ்டிரன் சொல்வதாக உள்ளது. இதற்கு ஒரு ஸ்லோகம் கூட உண்டு:

    ஷட்சாதநி ஸவிம்சாதி ச்லோகானாம் ப்ராஹ கேசவ: |

    அர்ஜுனஸ் ஸப்தபஞ்சாசத் ஸப்தஷஷ்டிந்து ஸஞ்ஜய: ||

    த்ருதராஷ்ட்ர: ச்லோகமேகம் கீதாயா: மாநமுச்யதே ||

பாரதம் ஐந்தாவது வேதம் (பாரத: பஞ்சமோ வேத:),  என்பது வழக்கு. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவாகப் பிரிக்கப் படுகிறது. இதில் ஞான காண்டம், ஆத்மாவைக் குறித்த ஆராய்ச்சிகள் இடம் பெரும். ஞான காண்டத்துக்கு உபநிஷத் என்றும் பெயர் உண்டு.  அதே போல பாரதத்தில் ஞான காண்டமாக கீதை விளங்குகிறது. கீதையை ஓதினால் உபநிஷதங்கள் அனைத்தையும் கற்ற பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  • சமஸ்க்ருதத்தில் கீதம் என்கிற சொல் நபும்சக லிங்கம். ஆனால் பகவத் கீதா என்ற சொல்லில் கீதா என்பது ஸ்த்ரிலிங்கமாக இருக்கிறது. வேதங்களில் ஞான காண்டமான உபநிஷத் என்கிற பெயர் கூட ஸ்த்ரி லிங்கம் தான்!
  • கீதையில் நான்காம் அத்தியாயம் வரை கிருஷ்ணன், அர்ஜுனனின் நண்பனாக பேசுகிறார். அதற்கு மேல் உள்ள அத்தியாயங்களில் கடவுளாக பேசுகிறார்.
  • கீதையை விண்ணை முட்டுகிற ஒரு அழகிய அலங்கார வளைவு (arch) போல உருவகித்தால், முதலில் போர் சம்பந்தப் பட்ட காட்சிகள் அந்த அலங்கார வளைவின் பூமியில் பதித்த ஒரு காலாக துவங்கி, நடுவில் விண்ணை முட்டுகிற நிலையில் தத்துவ அலசல்களாக வளர்ந்து (அங்கே போர் சம்பந்தமான பேச்சு இல்லை), இறுதியில் பூமியில் பதிந்துள்ள அலங்கார வளைவின் இன்னொரு காலாக போர் சம்பந்தப் பட்ட காட்சிகளுக்கு வந்து சேருகிறது.
  • கீதைக்கு சம்பிரதாய தரிசன உரைகள் தவிர்த்து, தென்னாட்டில் பாரதியாரின் உரை பெருமை வாய்ந்தது. அதே போல ராஜாஜியின் “கைவிளக்கு” என்னும் உரையும்,   பால கங்காதர திலகரின் “கர்ம யோகம்” என்கிற உரையும், மகாத்மா காந்தி எழுதிய “அநாஸக்தி யோகம்” என்கிற உரையும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு பிரசித்தமாக உள்ளன.
  • கீதையில் (1:6) மகாரதன் என்று கூறப் படும் வீரன், தன்னையும், தன் தேர் சாரதி, குதிரைகளையும் பகைவரின் ஆயுதங்களால் அடிபடாமல் காப்பாற்றிக் கொண்டு, பதினாயிரம் வீரர்களுடன் போர் செய்பவன்.

மஹாரதா: ஏகாதசஸஹஸ்ராணி யோதயேத் யஸ்து தந்விநாம் |

சஸ்த்ரசாஸ்த்ரப்ரவீண: ச விஜ்ஞேய: ஸ: மஹாரத: ||

  • கீதையில் வரும் யோகம், க்ஷேமம் என்கிற வார்த்தைகளுக்கு பொருளாக, அடையாததை அடைதல் யோகம் என்றும் அடைந்ததைக் காத்தல் க்ஷேமம் என்றும் இவ்விரண்டையும் இறைவன் அளிக்கிறான் என்று கீதையில் சொல்லப் படுகிறது.
  • கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில், முதல் ஆறு ஜீவாத்ம தத்துவமாகவும், இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் பரமாத்ம தத்துவமாகவும், மூன்றாவது ஆறில் இவற்றின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.
  • துர்யோதந: என்ற பெயருக்கு தீய வழியில் போர் புரிபவன் என்று பொருள் உண்டு. யுதிஷ்டிர: என்ற பெயருக்கு போரில் நிலையாக /யுத்தத்தில் ஸ்திரமாக இருப்பவர் என்று பொருள்.
  • பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சங்குக்கு பெயர் பாஞ்சஜன்யம் – இது பஞ்ச ஜனன் என்கிற அரக்கனைக் கொன்று அவன் எலும்பில் இருந்து செய்யப் பட்டது என்று கூறப் படுகிறது. அர்ஜுனனின் சங்கு தேவதத்தம் தேவர்களால் கொடுக்கப் பட்டது என்று பொருள். பௌண்ட்ரம் என்பது “புடி கண்டநே” என்கிற தாதுவிலிருந்து, எதிரிகள் மனதை பிளப்பது என்று பொருள் படுகிறது.

Read Full Post »

புத்தியிலே சார்பு எய்தியவன்,இங்கு நற்செய்கை, தீச்செய்கை

இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோக நெறியிலே

பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை,2-

ஆம் அத்தியாயம், 50- ஆம் சுலோகம்.)

Download

Read Full Post »

கீதையின் பாதை
‘தன்னை அழுத்தத் துடிக்கின்ற சூழ்நிலைகளில் ஓர் உயிர் தன்னை
வெளிப்படுத்தவும் நிறைநிலையை அடையவும் முயல்வதே
வாழ்க்கை’ என்று வாழ்க்கையை விளக்கினார்  சுவாமி விவேகானந்தர்.

DOWNLOAD

Read Full Post »