Feeds:
Posts
Comments

Posts Tagged ‘பாரத மாதா’

பாரதமே உயிர்த்தெழு

               உங்கள் நாட்டிலுள்ள மூலப் பொருட்களை பயன் படுத்தி அயல் நாட்டினர் பணமாக குவிக்கிறார்கள். நீங்களோ பொதி சுமக்கின்ற கழுதைகளைப் போல் அவர்களின் மூட்டைகளை சுமக்கிறீர்கள். இந்தியாவின் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து , தாங்கள் அறிவை பயன் படுத்தி பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். நீங்களோ உங்கள் புத்தியை பூட்டி வைத்து விட்டு , உங்கள் சொத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு , சோறு சோறு என்று பரிதாபமாக அலைகிறீர்கள்!..

     

              சோம்பலும் கயமையும் வஞ்சகமும் இந்த நாட்டையே மூடிக் கொண்டிருகின்றன. அறிவுள்ள ஒருவன் இவற்றை எல்லாம் பார்த்துகொண்டு அமைதியாக இருக்க முடியுமா ? அவன் கண்களில் நீர் பெருகாதா ? சென்னை . மும்பை . பஞ்சாப் , வங்காளம் என்று எங்கே பார்த்தாலும் வாழ்க்கைத் துடிப்பு இருப்பதற்கு அடையாளத்தை என்னால் காண முடியவில்லை. படித்தவர்கள் என்று உங்களை நினைத்து கொண்டிஇருக்கிரர்கள்! என்ன மண்ணாங்கட்டியைப் படித்து விட்டிர்கள் ? மற்றவர்களின் கருத்துகளை திருப்பிச் சொல்லக் கற்றிருக்கீர்கள்! அயல்மொழியில் படித்து , மனப்பாடம் செய்து உங்கள் மூளையை நிரப்பி கொண்டு .சில பட்டங்களை வாங்கிக் கொண்டிஇருக்கிரர்கள்! சீ, சீ இதுவா படிப்பு ? உங்கள் படிப்பு பின் லட்சியம் என்ன ? ஒரு குமாஸ்தா வேலை அல்லது ஒரு கேடு கெட்ட வக்கீல் , அதிகம் போனால் குமாஸ்தா வேலையின் பரிணாமமான ஒரு துணை நீதிபதி – இதுதானா!..

                    ஒரு முறை கண்களை திறந்து பார் . பொன் விளையும் பூமியான இந்த பாரத திரு நாட்டில் ஒருபிடி உணவிற்காக மக்கள் அல்லாடும் பரிதாபமான நிலை பார் . உங்கள் படிப்பால் இந்த பரிதாப குரல்களின் தேவை நிறைவேறுமா ? ஒரு போதும் நிறைவேறாது. மேலை விஞ்ஞானத்தின் உதவியோடு பூமியை நன்றாக உழுது , உணவு பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் ஒருவனின் கீழ் கைகட்டி வேலை பார்த்தல்ல , உங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை கண்டுபிடிப்பதன் முலம் இதைச் செய்ய்ங்கள். இப்படி தங்களுக்கு வேண்டிய உணவையும் தாங்களே ஈட்டிக் கொள்வதற்காகத்தான் அவர்கள் ரஜோ குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் போதிக்கிறேன்..

இளமையிலிருந்து  நாம் பெறுவது எதிர்மரையனா கல்வி. நாம் உதவாக்கரைகள் என்றே நாம் கற்று வருகிறோம் . நமது நாட்டில் பெரிய மனிதர்கள் எல்லாம் பிறந்தார்கள் என்பது நமக்கு தெரியாது. உடன்பாட்டு முறையிலான கல்வி எதையும் பெற வில்லை . கைகளையும் கால்களையும் எப்படி பயன் படுத்துவது குட நமக்குத் தெரியாது . ஆங்கிலயேர்களின் ஏழு தலைமுறை முன்னோர்கள்   ஒன்று விடாமால் படித்தோம் ; ஆனால் நமது முன்னோர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது; பலவினத்தை கற்று கொண்டோம்  . வெல்லப்பட்ட இனமான நாம் பலவினர்கள் , சுததிரமாக ஏதும் செய்யா முடியாதவர்கள் என்று கற்று கொண்டோம். இந்த நிலையில் சிரத்தை எப்படி போகுமால் இருக்கும் ? சிரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் ; தனம்பிக்கை மறுமலர்ச்சி   பெற வேண்டும் . அப்போது நமது நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தாமாக படிப்படியாக தீர்ந்து போகும்.

பிச்சைக்காரனின் குறை ஒரு நாளும் தீராது, நீங்கள் கேட்பதை எல்லாம் அரசாங்கம் தந்து விடுவதாக வைத்து கொள்ளவோம். பெற்ற அவற்றை பேணி காக்க மனிதர்கள் எங்க இருகிறார்கள் ? எனவே முதலில் மனிதர்களை உருவாக்குங்கள் . மனிதர்களே வேண்டும் . சிரத்தை இல்லாமால் மனிதன் எப்படி உருவாக  முடியும் .

உடன்பாட்டுக் கருத்தக்களை மட்டுமே மக்களுக்கு நாம் தர வேண்டும் . எதிர் மறையான கருத்துகள் மனிதனை பலவீனம் படுத்தும் . எங்கே பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் பிள்ளைகளை படிக்குமாறு வற்புறுத்தி கொண்டுயருகிரார்கள் ,  இவர்களால் எந்த பயனும் இல்லை ,முட்டாள்கள் , மடையர்கள் என்று திட்டி கொண்டு இருகிறார்கள் அந்த பிள்ளைகள் பின்னல் அது போலவே ஆகி விடுகிறார்கள் …

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ,விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக்காலில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்வி தான் நமக்குத் தேவை. மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி. அறிவு வளர்ச்சிக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் மனதை ஒருமுகப்படுத்துதல். கல்வியின் இலட்சியமே மனதை ஒருமுப்படுத்துவதுதான்.“

கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

Read Full Post »

நாட்டு பற்றினை ஊட்டி வளர்க்கும்
மந்திரம் வந்தே மாதரம்
நாடிது வென்றிட ஊக்கமளிக்கும்
தாரகம் வந்தே மாதரம்

இராம பிரானின் கானக வாசக் காவியம் வந்தே மாதரம்
சங்கரன் சிறுவயதில் சிரமேற்க துறவறம் வந்தேமாதரம்
நரேந்திரன் நடுக்கடலில் நாடிய நற்றவம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

பாஞ்சாலங்குறிச்சி  பறைசாற்றும் பாசுரம் வந்தேமாதரம்     
வாஞ்சியும், பாரதியும் வ.உ.சி யும் வாழ்ந்தது வந்தேமாதரம்
வாழ்வினை ஈந்திடும் மைந்தரின் வீரகர்ஜனை வந்தேமாதரம்  

(நாடிது வென்றிட)  

நாட்டிற்கெனவே வாழ்ந்திடுவோம் சங்கல்பம் வந்தேமாதரம்
நாடுயர்த்தி புகழோங்கிடச் செய்யும் சபதம் வந்தேமாதரம்
கோடி மைந்தரும் ஒரு குரலாய் முழக்கிடுவோம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

Read Full Post »

பாரத மாதா

ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதிதரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கன மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே!

DOWNLOAD AUDIO MP3

ஜன கன மன அதிநாயக ஜய ஹே – மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Read Full Post »

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம்  தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின, கோளாய்!
வீதியெ  லாம்அணு   குற்றனர் மாதர்!
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றனர்,
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின  ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பணிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம்  யாமே?
இன்னமும் துயிலுதி யேல் இது நன்றோ?
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

Read Full Post »