Feeds:
Posts
Comments

Archive for June, 2011

இந்தியா! உனது பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துரவிகளுக்கேல்லாம் பெருந்துறவி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்ட உமாபதி சங்கரர் என்பதை மறவாதே! உன் திருமணம், உன் செல்வம், உன் வாழ்க்கை இவை புலனின்பத்திர்காக அல்ல, உன் தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என்பதை என்பதை மறவாதே! அன்னையின் பீடத்தில் பலியிடப்படுவதற்கே நீ பிரந்துள்ளாய் என்பதை மறவாதே!உன் சமுதாயம் மகாமாயையான அன்னையின் நிழல் என்பதை மறவாதே!

தாழ்ந்த ஜாதியினர், அறிவிலிகள்,ஏழைகள், படிக்காதவர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள், எல்லோரும் உன்னுடைய ரத்தம், உன் சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே, துணிவுகொள். ‘நான் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன்’ என்று கர்வத்துடன் சொல்.

றிவற்ற இந்தியன், ஏழை இந்தியன், பிராமண இந்தியன்,கீழ்ஜாதி இந்தியன் எல்லோரும் என் சகோதரர்கள்’ என்று சொல்; இடுப்பில் கந்தை மட்டும் கட்டிக்கொண்டு நீயும் உரத்த குரலில் பெருமையாகக் கூறு; இந்தியன் எனது சகோதரன், இந்தியன் எனது வாழ்க்கை, இந்தியாவின் தேவதேவியர்  எனது தெய்வங்கள். இந்தியச் சமுதாயம் என் குழந்தைப் பருவத்தின் தொட்டில், என் வாலிபப் பருவத்தின் இன்பத்தோட்டம், என் முதிய பருவத்தின் வாரணாசி.

கோதரா சொல்-‘இந்திய மண்தான் எனது சொர்க்கம். இந்தியாவின் நலன்தான் என்னுடைய நலன்.’ இரவும் பகலும் திரும்பத்திரும்பப் பிரார்த்தனை செய்-‘ ஓ கௌரி மணாளா, ‘ஓ உலக நாயகியே, எனக்கு மனிதத்துவத்தைக் கொடு; அம்மா, என்னுடைய பலவீனத்தைப் போக்கு; என் கோழைத்தனத்தை போக்கு! என்னை மனிதனாக்கு.’

Read Full Post »

பாரதம்

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுப்பட்டதும் பல நாடுகள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளன. நமக்கு மிகவும் அண்மையில் உள்ள நாடுகளான பர்மாவும் சிலோனும் உதாரணங்கள்.பர்மா தனது பெயரை மியான்மர் என்று மாற்றிக் கொண்டுவிட்டது. சிலோன் தனது பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றிக் கொண்டது.

அந்நியர்களால் அடிமைப் படுத்தப்பட்டு சுரண்டப்படுவதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே தான் ஒரே நாடாக இருந்ததை உலகத்தின் முன் நிருபித்துக் காட்டிவது; உலக அரங்கில் ஒரு நாடாகக் தன்னை நிலைநாட்டிக் கொள்வது – இவைதான் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியாக அமைந்த அடிப்படைக் காரணம். இத்தகைய ஒரு நடவடிக்கையின் மூலம் அவை தங்களது தனித்தன்மையைப் பறைசாற்றிக்கொள்ள விரும்பின. வேரைக் கண்டுபிடித்து, நிலத்தைச் சுத்தம் செய்துகொடுத்து, வேர் நன்கு பிடித்து வளர வழிசெய்து கொடுப்பது – இதுதான் இந்த இரண்டு நாடுகளிலுமே நடை பெற்றுள்ள விஷயம். நியுசிலாந்து கூட இப்படிதான். அது தனக்குச் சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயரை வீசி எறிந்துவிட்டு தனது சொந்த மொழியிலிருந்து ஒரு பெயரை வைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது.

நமது நாட்டுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம் உருவத்திலும் மக்கள் தொகையிலும் எவ்வளவு சிறியவை இந்த நாடுகள் ! சரித்திரத்தில் பார்த்தால், இவை ரொம்பவும் புதிய நாடுகள். கலாசாரத்திலோ, இவை ரொம்பவும் புதிய நாடுகள்.கலாசாரத்திலோ, இவை இளமையானவை. உடன்படுபவைகளைவிட முரன்பவைகல்தான் எக்கச்சக்கமாக உள்ளன.ஆனால் இந்த நாடுகள் எல்லாம் தங்களது தேசிய ம உறுதியைக் காட்டின.பாவப்பட்ட “நாம்” மட்டும் இன்னமும் “இந்தியா”வை விடுகிற வழியைக் காணோம். என்னே பரிதாபம்! “நாற்பதுகளில் ‘தேசிய சுதந்திரம்’ என்ற ஒரு மாபெரும் சகாப்தத்தையே துவக்கி வைத்து நாம் தான்” என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொல்லும்போது இந்த வேதனை மிகவும் அதிகரிக்கிறது.

சுதந்திரம் பெற்ற அனைத்து நாடுகளிலுமே நம் நாடு தான் மிகப் பழமையானது. ஆனால் நமது அரசியல் நிர்ணய சபையானது நமது அரசியல் சாசனத்தை வரையருப்பதர்காகக் கூடியபோது அதன் நிர்மான கர்த்தாக்கள் நமது தாய்நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார்கள் (India That is Bharat )  மீண்டும் அதே மனநிலை. ‘இந்தியா என்பது ஒரு நாடாக உருவாகிக் கொண்டு வருகிறது” என்று கருத்தும் அதே மனநிலை நீடித்தது. இந்த நாட்டின் அமரத்துவம் வாய்ந்த தேசியத் தன்மை முழுமையாக மறக்கப்பட்டுவிட்டது.
அவர்கள் மனதில் ஆதிக்கம் செலுத்திவந்ததெல்லாம் 18 ஆம் நுற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய அரசியல் ரீதியான தேசியம்தான். அது ,நெப்போலியன் தனது எல்லைகளை விருத்தி செய்துகொண்டே போனதற்கு எதிராக ஏற்பட்ட வெறும் அரசியல் ரீதியான எதிர்மறை விளைவு மட்டுமே. எனவே பாரதம் என்ற புனிதமான பெயரை – ஆழ்ந்த பொருள் செறிந்த புனிதப் பெயரை – தொன்றுதொட்டு நமது எல்லா இலக்கியங்களிலும் எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டு வரும் பாரதம் என்ற அந்தப் பெயரை, அவர்களால் தரிசனம் செய்யமுடியவில்லை. சஈனப்படைஎடுப்பு சமயத்தில், ‘இமயமலைக்குத் தெற்கே அமைந்துள்ள நிலப்பரப்பு முழுவதும் பாரதம்தான்’ என்பதை உலகத்திற்கு நிலைநாட்டுவதற்காக, டாக்டர் ராதாகிருஷ்ணன் ,

“உத்தரம் யத் சமுத்திரஸ்ச ஹிமாத்ரேஸ் சைவ தக்ஷிணம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்ததி”

என்ற வரிகளைச் சுட்டிக் காட்டினார்.

இந்தியா

ஆனால் நமது அரசியல் சாசனம் நிர்ணயிக்கப்பட்ட வேளையில், நிர்வாகத்தில் அமர்ந்திருந்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ள ‘சந்தேகத்துக்கு இடமேயில்லாத இந்த வரையறையை அறியாதவர்களாய் இருந்துள்ளனர். இது ஒன்றே போதுமான தாயிற்றே! பெயர்ப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்குமே இது! என்ன பெயர் வைப்பது என்ற விவாதத்திற்கு இடமே ஏற்பட்டிருக்காதே ! ஆனாலும் ஏனோ அவர்கள் இருட்டிலே தட்டுத் தடுமாறி நடந்து, குருடன் தடவித்தடவித் படிப்பதுபோல “இண்டியா தட் ஈஸ் பாரத்” என்று படித்தார்கள்.

சரி. இதன் பொருள் என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா, பாரதம் என்று அழைக்கப்படும். இதுவே, பாரத் தட் ஈஸ் இண்டியா என்று இருந்தால் ? நமது நாட்டின் பெயர் பாரதம்; இதை இந்தியா என்றும் அழைப்பார்கள் என்று பொருள்படும் அல்லவா! இந்த இரண்டில், இரண்டாவதாகச் சொல்லப்பட்டதுதான் கொஞ்மாவது அறிவுபூர்வமாக இருந்திருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் சிந்தனைக் குழப்பம்; தேசியம் பற்றிய இரவல் வாங்கப்பட்ட கருத்துக்கள். நல்லவேளை, இண்டியா தட் வாஸ் பாரத் (இந்தியா அதாவது பரதம் என்று இருந்தது) என்று இவர்கள் போடாமல் பார்த்துக் கொண்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இண்ட், இண்டியா, இண்டிகா போன்ற எல்லாம் வெளியாட்கள் சிந்து நதிக்கு அப்பால் இருந்து கொண்டு  நமக்கு இட்டபெயர்கள். ஆனால் நமக்கு நாமே வைத்துக்கொண்ட, இன்றும் வைத்துக்கொண்டிருக்கிற – பெயர் பாரதம். ஆகா இந்த இரண்டில் எது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்? கண்டிப்பாக, பிந்தையதுதான். ஆனால் அந்தக் கண்ணோட்டம் இல்லை. அதன் விளைவுதான் இன்றைய குழப்பநிலை.

இஸ்ரேலியர்களின் முக்கியமான செயல் ஒன்றை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது நமக்கு அறிவூட்டுவதாய் அமையும்.அவர்கள் சுதந்திரம் பெற்ற நாடாக ஆனா அதேவேகத்தில், புவியியல், வரலாற்று நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார்கள். பத்திரிகை நிருபர்கள் இதன் காரணத்தைக் கேட்டபோது, ” எங்கள் நாடு புராதனமான நாடு. இதை நாங்களும் எங்கள் குழந்தைகளும், உலகமும் ஏற்றுக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று பதில் கூறினார்கள்.

Read Full Post »