Feeds:
Posts
Comments

Archive for August, 2011

நீலகண்ட பிரம்மச்சாரி.

தஞ்சை எருக்கூரைச் சார்ந்தவர்.
தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்.

வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 14 பேரில் முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி தான்.
வழக்கின் தீர்ப்பில் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 71/2 ஆண்டு காலம் தண்டனை. சிறைசெல்லும்போது  அவருக்கு வயது 21  தான்.
சிறைவாசம் முடித்து வெளியே வருகிறார். நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம். அதற்குக் கிடைத்ததோ பசியும், பட்டினியும் தான். பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு ‘இராப்பிச்சை’ எடுக்க ஆரம்பிக்கிறார்,பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டதே என்று நினைத்த அவர், அதையும் நிறுத்தி விட்டார்.விளைவு பல நாள் பட்டினி.

ஒரு நாள் பசி பொறுக்கமுடியாமல். திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த தனது நண்பர் பாரதியாரைப் பார்க்க வருகிறார்.
பசியால் வாடிப்போன நீலகண்டனை பாரதியாருக்கு அடையாளமே தெரியவில்லை.

“பாரதி நான்தான் நீலகண்ட பிரம்மச்சாரி” என்று சொன்னவுடன், டேய், நீலகண்டா என்னடா, இது கோலம்” என்று அவரை கட்டி அனைத்துக் கொண்டார்.

“பாரதி, எனக்கு ஒரு நாலணா (25  பைசா) கொடேன். சாப்பிட்டு நன்கு நாளாச்சு” என்றார்.
இதைக் கேட்டவுடன் கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.
அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சிகரமான பாடல்தான்

“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” – என்பதாகும்.

– விஜய பாரதம் (19-08-2011)

Read Full Post »

நாட்டு பற்றினை ஊட்டி வளர்க்கும்
மந்திரம் வந்தே மாதரம்
நாடிது வென்றிட ஊக்கமளிக்கும்
தாரகம் வந்தே மாதரம்

இராம பிரானின் கானக வாசக் காவியம் வந்தே மாதரம்
சங்கரன் சிறுவயதில் சிரமேற்க துறவறம் வந்தேமாதரம்
நரேந்திரன் நடுக்கடலில் நாடிய நற்றவம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

பாஞ்சாலங்குறிச்சி  பறைசாற்றும் பாசுரம் வந்தேமாதரம்     
வாஞ்சியும், பாரதியும் வ.உ.சி யும் வாழ்ந்தது வந்தேமாதரம்
வாழ்வினை ஈந்திடும் மைந்தரின் வீரகர்ஜனை வந்தேமாதரம்  

(நாடிது வென்றிட)  

நாட்டிற்கெனவே வாழ்ந்திடுவோம் சங்கல்பம் வந்தேமாதரம்
நாடுயர்த்தி புகழோங்கிடச் செய்யும் சபதம் வந்தேமாதரம்
கோடி மைந்தரும் ஒரு குரலாய் முழக்கிடுவோம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

Read Full Post »

சாஸ்திர  சாரத்தை நீயும் தரணிக்கு தந்தாயே
யோகமும் தியாகமும்
திரண்ட உருவே விவேகானந்த

குகையிலும் வனத்திலும் மறைந்த வேதம்
நடைமுறை வாழ்க்கையில் விழித்து எழுந்திட  |
ஒவ்வொரு  மனிதனும் தன்னுள் உணர
ஆத்திக வானில் நம்பிக்கை உதித்திட ||

விழிகள் மூடிய வறட்டு தியானம்
கரிய இருளில் மனத்தை ஆழ்த்திட |
விழிகளை திறந்து வழியும் காட்டி
ஜீவ வடிவினில் சிவனை வழிப்பட ||

புதிய பாரதம் புலர்ந்தது இன்று
தேச லட்சியம் புரிந்தது நன்று |
வீறு கொண்ட பல இளைஞர்கள் கூட்டம் 
சேவை யோகத்தில் சாதனை செய்திட  ||

Read Full Post »

சுவாமிஜி இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறிர்கள்?

மேலைநாட்டு வெற்றிகளுக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்பும்  வேளையில் நண்பர் ஒருவர் விவேகானந்தரிடம், ‘சுவாமிஜி, ஆடம்பரமும் செல்வாக்கும் மிக்க மேலை நாடுகளில் நான்கு வருடங்கள் வாழ்ந்து விட்டீர்கள். இதோ இப்போது உங்கள் தாயகத்திற்குத் திரும்புகிறீர்கள். உங்கள் தாய்நாட்டைப்பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார். விவேகானந்தரின் கண்களில் மகிழ்ச்சியின் கீற்றுகள் மின்னின. முகத்தில் ஆனந்த பரவசம் மிளிர்ந்தது. உணர்ச்சி பொங்கும் குரலில், ‘அங்கிருந்து வருமுன்பு நான் இந்தியாவை நேசித்தேன்.இப்போதோ அதன் துசிகூட எனக்கு புனிதமாகத் தெரிகிறது. அங்கு வீசும் காற்று புனிதம். அது ஒரு புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத்தலம்’ என்று கூறினார்.

Read Full Post »