Feeds:
Posts
Comments

Posts Tagged ‘vivek’

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013)

சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின  விழாவை முன்னிட்டு விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் 02/02/2013 அன்று தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் “சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி ” அமைக்கப்பட்டது .

001

கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் விதமாக படங்கள் வைக்கபட்டு இருந்தன. இதன் ஒரு பகுதியாக ஊக்கமூட்டும் வீடியோப் படங்கள் காண்பிக்கப்பட்டன. இந்த வீடியோ படங்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. கண்காட்சியில் புத்தக விற்பனையும் நடைப்பெற்றது.

002

கண்காட்சியில் 7 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 500 க்கு  மேற்பட்ட மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர். 80 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில் வீடியோ படம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினர் . கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்தியை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இக்கேள்விகள் சரியான பதில் எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு “விவேகானந்தர் அழைக்கிறார்” புத்தகமும் “மாணவனே மனதை ஒருமுகப்படுத்து ” என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

005

கண்காட்சியின் நிறைவு விழாவில் சுவாமி ஆத்ம கனானத்தர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். “மனிதா நீ மகத்தானவன் ” என்ற பாடலை பாடி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் தெரியாது என்று பதில் கூறினர். சரி காந்தியை பற்றி தெரியுமா என்று கேட்டார்.ஆம் தெரியும் என்று மாணவர்கள் அனைவரும் கூறினர். காந்தியை பற்றி தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியவில்லை என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் அமைதியாய் இருந்தனர். அதில் ஒரு புத்திசாலி மாணவி எழுந்து காந்தி தாத்தா நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டர் என் தாத்தா என்ன செய்தார் நான் ஏன் அவரை நினைவில் வைக்க வேண்டும் என்றார். அது போல நாம் வாழும் இந்த பூமியில் நாம் வாழ்ந்தற்குகான ஏதேனும் சான்றை விட்டுச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

008

தலைமையாசிரியர்  பேசும் போது இப்படி ஒரு வாய்ப்பு நமது பள்ளிக்கு கிடைத்தது  ஒரு பாக்கியம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவ , மாணவி அனைவரும் அவரது வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

009

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி பரிசுகள் வழங்கினார் மற்றும்  பள்ளிக்கு விவேகானந்தர் இளைஜர் மன்றம் சார்பில் நினைவுபரிசும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

011

Read Full Post »

Image

Image

Image

Read Full Post »

Naren School

6789

தொடரும் ……

Read Full Post »

சிறுவயதில் விவேகானந்தர்

 

தொடரும் …..

Read Full Post »

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
சீடர்: ‘சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?”
சுவாமி விவேகானந்தர் “உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் “சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா’- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது’ என்று கூறுகிறார்.
அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.
மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், ‘அறிபவனை எதனால் அறிவது?’ என்று கேட்கின்றன.
உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. ‘உணரப்படுகிறது’ என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.
மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!
–சுவாமி விவேகானந்தா …

Read Full Post »

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

–சுவாமி விவேகானந்தா ..

Read Full Post »