Feeds:
Posts
Comments

Posts Tagged ‘தேசபக்தி பாடல்’

நாட்டு பற்றினை ஊட்டி வளர்க்கும்
மந்திரம் வந்தே மாதரம்
நாடிது வென்றிட ஊக்கமளிக்கும்
தாரகம் வந்தே மாதரம்

இராம பிரானின் கானக வாசக் காவியம் வந்தே மாதரம்
சங்கரன் சிறுவயதில் சிரமேற்க துறவறம் வந்தேமாதரம்
நரேந்திரன் நடுக்கடலில் நாடிய நற்றவம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

பாஞ்சாலங்குறிச்சி  பறைசாற்றும் பாசுரம் வந்தேமாதரம்     
வாஞ்சியும், பாரதியும் வ.உ.சி யும் வாழ்ந்தது வந்தேமாதரம்
வாழ்வினை ஈந்திடும் மைந்தரின் வீரகர்ஜனை வந்தேமாதரம்  

(நாடிது வென்றிட)  

நாட்டிற்கெனவே வாழ்ந்திடுவோம் சங்கல்பம் வந்தேமாதரம்
நாடுயர்த்தி புகழோங்கிடச் செய்யும் சபதம் வந்தேமாதரம்
கோடி மைந்தரும் ஒரு குரலாய் முழக்கிடுவோம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

Read Full Post »

சாஸ்திர  சாரத்தை நீயும் தரணிக்கு தந்தாயே
யோகமும் தியாகமும்
திரண்ட உருவே விவேகானந்த

குகையிலும் வனத்திலும் மறைந்த வேதம்
நடைமுறை வாழ்க்கையில் விழித்து எழுந்திட  |
ஒவ்வொரு  மனிதனும் தன்னுள் உணர
ஆத்திக வானில் நம்பிக்கை உதித்திட ||

விழிகள் மூடிய வறட்டு தியானம்
கரிய இருளில் மனத்தை ஆழ்த்திட |
விழிகளை திறந்து வழியும் காட்டி
ஜீவ வடிவினில் சிவனை வழிப்பட ||

புதிய பாரதம் புலர்ந்தது இன்று
தேச லட்சியம் புரிந்தது நன்று |
வீறு கொண்ட பல இளைஞர்கள் கூட்டம் 
சேவை யோகத்தில் சாதனை செய்திட  ||

Read Full Post »

விவேகானந்தரை நினைத்திடுவோம் |
விவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||
தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம் 
தெய்வத்தொண்டில் சிறந்திடுவோம் |
விவேகானந்தரின் நெறியில் நின்றே 
ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||
தொண்டும் துறவும் போற்றிடுவோம் 
இதயத்தைக்  கோயில் ஆக்கிடுவோம் | 
விவேகானந்தரின் குரலை முழங்கி 
சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||
சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம் 
பொதுநலம் பேணி உழைத்திடுவோம்  |
விவேகானந்தரின் கொடியை ஏந்தி 
தியாகத்தின்  உருவாய் விளங்கிடுவோம் ||
முனிவர்கள் பரம்பரை நாம் என்போம் 
பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |
விவேகானந்தரின் படையாய்   விளங்கி
மங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||

Read Full Post »

எழுந்திடு, விழித்திடு ஓ பாரதமே!
நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்படு

சுயநலம் களைந்தே பொதுநலம் பேணியே
ஏழை மாந்தரின் துயரம் போக்கிடு

மானுடம்  உருவாக்கும் வாழ்க்கை  வளமாக்கும்
கல்வி வேள்வியை கற்க வந்திடு

சகலம் தெய்வீகம் சாஸ்திர சாரம்
அகத்தினில் தேடிடு, அமைதியை நாடிடு

வலிமையே வாழ்வு, பயமே தாழ்வு
விவேகானந்தரின் பாதையில் நடந்திடு

Read Full Post »

வீர நரேந்திரா விவேகானந்தா
சரணம் சரணம் குரு நாதா
ஜீவ சேவையே சிவ சேவையென
பாதை காட்டி அருள் புரிந்தாய்

பரமஹம்சரின் அருளை பெற்று
பாருலகெங்கும் பவனி வந்தாய்
அன்னை சாரதையின் அன்பைபெற்று அகிலம்
முழுதும் அணைத்துக் கொண்டாய்!!

இந்து மதத்தின் இணையற்ற பெருமையை
இவ்வுலகெங்கும் பரவச் செய்தாய்
இப்புவி மக்கள் நலமுடன் வாழ
இறை அருள் ஒன்றே வழி என்றாய்!!

மனதின் ஆற்றல் மலையினும் பெரிதென
மாந்தர்களை நீ உணரச் செய்தாய்
தூய்மையும் தொண்டும் இருகண்களேன
திக்கெட்டும் நீ முரசொலித்தாய்!!

வேதத்தின் உண்மை காலத்தில் ஈன்றாய்
வேதாந்த சிங்கமே விவேகானந்த
வேத ஸ்வரூப விவேகானந்தா
வீரேசுவர சிவ நமோ நமோ!!

Read Full Post »

பாரத மாதா

ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதிதரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கன மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே!

DOWNLOAD AUDIO MP3

ஜன கன மன அதிநாயக ஜய ஹே – மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Read Full Post »

பிரார்த்தனா

நமஸ்தே ஸதா  வத்ஸலே மாத்ருபூமே

த்வயா ஹிந்துபூமே ஸுக(ம்) வர்த்திதோஹம்

மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே

பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே

ப்ரபோ  ஶக்திமன் ஹிந்துராஷ்ட்ராங்கபூதா

இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம்

த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம்

ஶுபாமாஶிஷந்  தேஹி தத்பூர்தயே

அஜய்யாஞ்ச விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம்

ஸுஶீலஞ் ஜகத்யேன  நம்ரம் பவேத்

ஶ்ருதஞ்சைவயத்கண்டகாகீர்ண மார்கம்

ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத்

ஸமுத்கர்ஷ நிஷ்ரேய  ஸஸ்யைக முக்ரம்

பரம் ஸாதனன்  நாம வீரவ்ரதம்

ததந்தஸ்  ஸ்புரத்வக்ஷயா த்யேய நிஷ்டா

ஹ்ருதந்தஹ் ப்ரஜாகர்து தீவ்ராநிஶம்‌

விஜேத்ரீ ச நஸ்  ஸம்ஹதா கார்ய சக்திர்

விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்‌

பர(ம்) வைபவன்  நேதுமேதத்‌ ஸ்வராஷ்ட்ரம்

ஸமர்தா  பவத்வாஶிஷா தே ப்ருஶம்

பாரத்  மாதா கீ ஜய்!

குறிப்பு:

ஶ – இந்த எழுத்தை, ஸ.ஷா இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வகையில், நாக்கை, ஓரளவு மடக்கி உச்சரிக்க வேண்டும்.

AUDIO DOWNLOAD

 

Read Full Post »

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம்  தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!

புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின, கோளாய்!
வீதியெ  லாம்அணு   குற்றனர் மாதர்!
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றனர்,
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின  ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பணிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம்  யாமே?
இன்னமும் துயிலுதி யேல் இது நன்றோ?
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!

மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

Read Full Post »